• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-13 10:57:27    
திபெத் இன புன்னகை அரசி சுவோமா

cri
ஷாங்ரிலா பற்றி குறிப்பிடுகையில், தெளிவான நீல வானத்தின் கீழுள்ள அமைதியான பனி நிறைந்த மலை, அழகான புல்வெளி, ஏரிகளின் கண்கொள்ளா காட்சிகள் ஆகியவை தான், கவர்ச்சியான சொர்க்கமான ஷாங்ரிலா பற்றி எண்ணும் போது நினைவுக்கு வரும். ஷாங்ரிலா, தென் மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்தின் Di Qing திபெத் இனத் தன்னாட்சி சோவின் தலைநகர் ஆகும். பனி நிறைந்த மலைகள், ஏரிகள் மற்றும் கன்னிக்காடுகள் ஆகியவை அங்கு அமைந்துள்ளன. அங்குள்ள திபெத் இனப் பண்பாடு மற்றும் நடையுடை பாவனைகள் தனிசிறப்பு மிக்கவை. இன்றைய நிகழ்ச்சியில், ஷாங்ரிலாவில் சுற்றுலா பயணியரின் வழிகாட்டியாக பணி புரியும் அழகான திபெத் இன மங்கை சுவோமா பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.

ஷாங்ரிலாவில் உள்ள Pu Da Cuo தேசிய பூங்காவில், பள்ளத்தாக்குகள், நதிகள், ஏரிகள், புல்வெளிகள், சதுப்பு நிலங்கள், அரிய விலங்குகள் மற்றும் தாவரங்கள் காணப்படுகின்றன. நாள்தோறும், சுவோமாவின் வழிகாட்டலுடன், பல்வேறு நாடுகளின் சுற்றுலா பயணியர் இப்பூங்காவை சுற்று பார்த்து, தங்களது அருமையான நேரத்தை மகிழ்ச்சியுடன் கழிக்கின்றனர். பூங்காவை சுற்றிக் காட்டுவதற்கு முன்பாக பயணியரை அவர் இவ்வாறு வரவேற்கின்றார்.
"மதிப்புக்குரிய நண்பர்களே, காலை வணக்கம். ஷாங்ரிலாவிலுள்ள அற்புதமான, அழகான Pu Da Cuo தேசிய பூங்காவுக்கு வருகை தந்துள்ள உங்களை வரவேற்கின்றேன். நீங்கள் இங்கு மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்க வாழ்த்துகின்றேன். Pu Da Cuo தேசிய பூங்காவின் பசுமையான மலைகளும் தெளிவான ஏரிகளும், உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தர வேண்டும் என விரும்புகின்றேன்" என்றார், அவர்.
சுவோமாவுக்கு வயது 21. திபெத் இனத்தைச் சேர்ந்த அவர், ஷாங்ரிலாவில் பிறந்து வளர்ந்தவராவார். அவர் பாட்டிலுல், நடனத்திலும் தேர்ச்சி பெற்று, சரளமாக சீன மொழியில் பேசுகிறார். அவர் பேசுகையில், அவரது கண்கள் மகிழ்ச்சியை வெளிக்காட்டுகின்றன.

Pu Da Cuo தேசிய பூங்காவில், கன்னிக்காடுகள் அதிகமாக இருக்கின்றன. மலைகளில் அலிசா மலர்கள் பூத்து குலுங்குகின்றன. ஊற்று நீர் சுரந்து ஓடையாய் ஓடுகின்றது. கன்னிக்காடுகளில் உள்ள oxygen உயிரின சுற்றுச்சூழலுக்கு போதுமானது. பறவைகள் காட்டில் சுதந்திரமாக பறந்து திரிகின்றன. மீன்கள் ஏரியில் மகிழ்ச்சியாக துள்ளி குதித்து நீந்துகின்றன. தொலைவில் பனி நிறைந்த மலைகள் அமைந்துள்ளன. நீல வானில், தூய்மை மாற, வெள்ளை மேகங்கள் படர்ந்து காணப்படுகின்றன. சுற்றுலா பயணியர் எழில் மிக்க படத்தின் முன்பு இருப்பது போல் உணரலாம்.
நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, சுவோமா பாடிய திபெத் இன நாட்டுப்புறப் பாடல் ஒன்று. அழகான ஷாங்ரிலாவில் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டும் போது, அவர்களுக்காக இனிமையான திபெத் இன பாடல்களை அவர் அடிக்கடி பாடுவதுண்டு.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், சுவோமா, ஷாங்ரிலாவில் உள்ள சுற்றுலா கல்லூரியிலிருந்து பட்டம் பெற்ற பின், Pu Da Cuo தேசிய பூங்காவில் வழிகாட்டியாக பணி புரிய துவங்கினார். அங்குள்ள அழகான காட்சிகளையும், தனிச்சிறப்பு மிக்க திபெத் இனப் பண்பாடு மற்றும் நடையுடை பாவனைகளையும் பற்றி பயணிகளிடம் அறிமுகப்படுத்துவது, அவரது பணியாகும். தமது பணி பற்றி சுவோமா மிகவும் மனநிறைவு அடைகின்றார். Pu Da Cuo தேசிய பூங்காவில் உள்ள மலர்கள், மரங்கள் மற்றும் ஏரிகள் மீது தாம் அதிக பற்று கொண்டுள்ளதாக அவர் கூறினார். அங்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் அனைவருடன், தமது மகிழ்ச்சியான மன நிலையைப் பகிர்ந்து கொள்ள அவர் விரும்புகின்றார்.

1 2