• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-13 10:57:27    
திபெத் இன புன்னகை அரசி சுவோமா

cri
வழிகாட்டி பணியை தாம் நேசிப்பதாக அவர் தெரிவித்தார். நாள்தோறும், அழகான காட்சிகளைக் கண்டு இரசிக்க முடிகிறது. அது மட்டுமல்ல, உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வருகின்ற பயணிகளுடன் நண்பர்களாக பழக முடிகிறது என்று அவர் கூறினார். பூங்காவில் உள்ள இயற்கை காட்சிகள் மற்றும் திபெத் இன நடையுடை பாவனைகளை பற்றி பயணிகளிடம் அறிமுகப்படுத்த மிகவும் விரும்புவதாக அவர் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"நாள்தோறும் காலை படுக்கையை விட்டு எழுந்தவுடன், புதிய நாள், ஒரு புதிய துவக்கமாகும் என்று நினைகின்றேன். தினமும் வெவ்வேறான நபர்களை, புதிய முகங்களை பார்க்க முடிகிறது. அதிக புதிய அனுபவங்களை பெறவும் முடிகிறது. ஏனெனில், நாள்தோறும் பயணிகள் வெவ்வேறு வகையான கேள்விகளை கேட்கின்றனர். அதனால் எனக்கும் பயன் கிடைக்கிறது" என்று அவர் கூறினார்.
எப்போதும் புன்முறுவலோடு காணப்படும் சுவோமா, ஒவ்வொரு பயணியரையும் நண்பராகக் கருதுவதோடு, உள்ளூர் இயற்கை காட்சிகள் மற்றும் பழக்க வழக்கங்கள் பற்றி உணர்வுபூர்வமாக விவரித்து, பயணிகள் கேட்கின்ற கேள்விகளுக்கு விவரமாக பதிலளிக்கின்றார். பதிலளிக்க முடியாத கேள்விகளை அவர் எழுதி வைத்து, அது தொடர்புடைய தகவல்களை தேடி பெறுகின்றார்.
இந்த சுற்றுலா வழிகாட்டி பணியின் காரணமாக, சுவோமா, இதர பெண் வழிகாட்டிகளுடன், ஷாங்ரிலாவுக்கு சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேசிய பூங்காவில் தங்கியிருக்கின்றார். மந்தமான சுற்றுலா காலத்தில், ஷாங்ரிலாவுக்கு சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தமது வீட்டுக்குத் திரும்பி, வயலில் வேலை செய்யும் பெற்றோருக்கு உதவி செய்கின்றார். தாம் வழிகாட்டியாக பணி புரிந்து ஈட்டும் பணம், தமது குடும்பத்துக்கு துணை புரிவது பற்றி அவர் மிகவும் மகிழ்ச்சியடைகின்றார். அவர் கூறியதாவது:
"எனது குடும்பத்துக்கு சுமார் ஒரு ஹெக்டர் நிலப்பரப்புடைய விளைநிலங்கள் உண்டு. அவற்றில் எனது பெற்றோர் சுறுசுறுப்பாக உழைக்கின்றனர். அவர்கள் இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம்"என்றார், அவர்.
சுவோமாவின் முகத்தில் எப்போதும் புன்னகை தவழ்கிறது. இது, அவரது சக பணியாளர்களுக்கும் மகிழ்ச்சியை தருகிறது. யி இன இளைஞர் Shen Xue Shu, கடந்த இரண்டு ஆண்டுகளாக சுவோமாவுடன் இணைந்து பணி புரியும் உடன் உழைப்பாளராவார். சுவோமாவை அவர் பாராட்டுகிறார். அவர் கூறியதாவது:
"சுவோமா உளம் மகிழ்ந்து வேலை செய்கிறார். நாள்தோறும் அவர் மகிழ்ச்சியாக வேலை செய்வதை பார்க்க முடிகிறது. இங்கு வந்த பயணிகளுடன் தமது மகிழ்ச்சியை அவர் பகிர்ந்து கொள்கின்றார்" என்றார், அவர்.

சுவோமா, தமது பணியை நேசிப்பதோடு, மேலதிக மக்கள், ஷாங்ரிலாவுக்கு வந்து, Pu Da Cuo தேசிய பூங்காவை சுற்றி பார்த்து மகிழ்ச்சியடைய வேண்டும் என்று அவர் விரும்புகின்றார். அது மட்டுமல்ல, சுற்றுலா பயணியர் எழில் மிக்க காட்சிகளை அனுபவிக்கும் வேளையில், அங்குள்ள தனிச்சிறப்பு மிக்க திபெத் இன நடையுடை பாவனைகள் மற்றும் பண்பாட்டை உணர்ந்து, புரிந்து கொண்டு, ஷாங்ரிலா மக்களின் பேரூக்கத்தை உலகின் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"இங்குள்ள காட்சிகள், மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடியவை. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். உலகின் பல்வேறு இடங்களிலிருந்து வரும் நண்பர்கள் இங்கு மகிழ்ச்சியை அனுபவித்து செல்வதையே விரும்புகின்றேன்" என்றார், அவர்.
1 2