 80 களில் மணமகள் வெண்ணிற கவுன் அணியும் வழமை மெல்ல நுழைந்து, அவையே பூத்தையல் வேலைப்பாடுகள் கொண்டவையாக மாற்றம் பெற்று, 90களில், திருமண ஆடை என்பது மனமகளை பொறுத்தவரை கவுனே என்ற நிலை ஏற்பட்டது.
மேற்கத்திய நாடுகளில் காணப்படும் கவுன் அணிந்து, கையில் பூங்கொத்து, தலையில் மெல்லிய துணி சொருகி, தரையில் வழிந்தோடும் வெண்ணிற ஆறுபோல் அமைந்த மனமகளின் திருமண அலங்காரம் சீனாவிலும் பரவியது. அதிலும் குறிப்பாக ஷாங்காய் உள்ளிட்ட மாநகரங்களில் இது பெரிதும் பரவலாகியது. மணமகன்களும் கறுப்பு நிற கோட்டும் சூட்டுமாக, வெண்ணிற சட்டையுடன் உலா வரத்தொடங்கினர்.
1 2
|