
இன்றைக்கு திருமணங்கள் எல்லாம் ஒரு பெரிய விழா போலத்தான். திருமணமென்பது ஒரு பெரிய நடவடிக்கையாக சீராக திட்டமிடப்பட்டு, நடத்தப்படுகின்றன. எல்லா திருமணங்களும் தானே திட்டமிடப்பட்டு நடைபெறுகின்றன என்ற கேள்வி எழுபவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம். நம்மூரிலும் இப்போது நாம் காணும், திருமணத்துடன் தொடர்புடைய சின்னச் சின்ன நகர்வுகளையும் முன்கூட்டியே திட்டமிட்டு, நடத்தும் பாங்கு, சீனாவிலும் நடைமுறையிலுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிழற்படத்துடன் முடிந்த திருமணங்கள் தற்போது சீனாவில் ஒரு மாபெரும் கொண்டாட்டமாக, பண்பாட்டு நடவடிக்கையை போல நடைபெறுகின்றன.
இன்றைக்குள்ள மணமகள் வைர மோதிரம் இருந்தால்தான் திருமணம் நடந்த மனநிறைவு அடையும் நிலை. கொஞ்சம் சேர்ந்தாப்போல நில்லுங்கம்மா, சார் கொஞ்சம் தலையை வலது பக்கமாக சாய்ச்சா போல சிரிங்க, என்று நிழற்படக் கலைஞர்கள் கையில் படக்கருவியுடன் மணமக்களை படம் எடுத்த காலம் மலையேறிவிட்டது. இன்றைக்கு படைப்பாற்றலும், ஒரு வித கலைநயமும் கொண்ட, நிழற்பட தொகுப்பையே மணமக்கள் விரும்புகின்றனர். அரசனும், அரசியுமாக அலங்கரித்து படமெடுப்பது, விதவிதமான பாணியில் உடைகளை மாற்றி படமெடுப்பது என்று அழகியல் கண்ணோட்டம் நிழற்படங்களில் காணப்படுகிறது. 1 2
|