கலப்பு எரியாற்றல் ஏவுகணை


 
இதுவரையில்லாத புதிய பொருளை கண்டுபிடிப்பது மட்டுமே கண்டுபிடிப்புகளில் ஒன்றாகிவிடாது. ஏற்கெனவே உள்ளவற்றில் முன்னேறிய தரம், மதிப்பு தொடர்பான முயற்சிகளும் கண்டுபிடிப்புகளில் இடம்பெறுகின்றன. முந்தைய கண்டுபிடிப்புகளிலிருந்து, அவற்றின் செலவு, மாசுபாடு, எரியாற்றல் ஆகியவை குறைந்த அல்லது மாற்று எரியாற்றல் கொண்ட முயற்சிகள், புதிய மாற்றங்களுக்கு தொடக்கமாக இருந்துள்ளன. பல கிலோமீட்டர் உயரம் பாய்ந்து செல்லும் ஏவுகனை சோதனைகள் செய்யப்பட்டிருந்தாலும், அதில் புதிய முயற்சியாக கலப்பு எரியாற்றல் கொண்ட ஏவுகணையை சீனா முதல் முறையாக ஏவியுள்ளது. "Beihang-2" ஏவுகணை வட மேற்கு சீனாவின் கான்சு மாநிலத்திலுள்ள Jiuquan செயற்கைக்கோள் மையத்திலிருந்து ஏவப்பட்டது. 3.417 மீட்டர் நீளமும், 0.22 மீட்டர் விட்டமும் உள்ள இந்த ஏவுகணை பெய்ஜிங் வானூர்தி மற்றும் விண்வெளி பொறியியல் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள விண்வெளி பொறியியல் கல்லூரியின் இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளான 15 பேரால் ஆய்ந்து வடிவமைக்கப்பட்டது. 3000 மீட்டர் உயத்தை எட்டிய அந்த ஏவுகணையின் முன்பகுதி வான்குடை மூலம் ஏவுதளத்தின் 1.2 கிலோமீட்டருக்கு அப்பால் தரையிறங்கியது. இந்த வகை ஏவுகணைகள் வெடிக்காது, மிகவும் குறைந்த செலவில் உருவாக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கலப்பு எரியாற்றல் கொண்ட ஏவுகணை செயல்படுகின்ற ஆற்றலை சோதிக்கவே இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
1 2
|