வாங் பாங் அம்மையார் மற்றும் தேவதை இல்லம்
cri
வாங் பாங் அம்மையார் மற்றும் அவர் நிறுவிய தேவதை இல்லம் இன்றைய நிகழ்ச்சியில் கதாநாயகியின் பெயர் வாங் பாங். தென்மேற்கு சீனாவின் குவாங் சி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நான்நிங் நகரில் மூளைக்கடுத்த திமிர்வாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் தாயாக அவர் இருக்கிறார். பல ஆண்டுகளாக அவர் சொந்த செலவில் முன்முயற்சியோடு, மூளைக்கடுத்த திமிர்வாதத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை மற்றும் உதவியளிக்கும் ஒரு மையமான தேவதை இல்லத்தை நிறுவினார். சில ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மூளைக்கடுத்த திமிர்வாதத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிலர் அவரது உதவியுடன் சிகிச்சை பெற்று காப்பாற்றப்பட்டனர். அவர் இதற்காக ஐ.நாவின் பாராட்டையும், உடல் திறன் சவால் கொண்டோர் இலட்சியத்துக்கு சேவை புரிவதற்கான தலைசிறந்த பங்களிப்பு விருதும் பெற்றார்.
1992ஆம் ஆண்டு 25 வயதான வாங் பாங்கிற்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர். ஆனால் முதன்முறை தாயாக மாறிய மகிழ்ச்சியை உணர்ந்த அதே வேளையில், தனது மூத்த மகள் பௌ பௌ, மூளைக்கடுத்த திமிர்வாதம் என்ற நோயால் பீடிக்கப்பட்டதாக அவர் கண்டறிந்தார். அவரது எழுச்சி கடுமையாக பாதிக்கப்பட்டு உள நலச் சிக்கலாக மாறும் விளிம்பில் இருந்தது. "அப்போதைய எனது மனநிலையை தெளிவாக கூற முடியாது. உலகின் கடைசி நாள் வருவதை போல் உணர்ந்தேன். அந்நிலையை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியாது" என்றார் வாங் பாங். தமது மகள் மூளைக்கடுத்த திமிர்வாதத்தினால் பாதிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டதும், சிகிச்சை பெறுவதற்காக வாங் பாங் மகளை அழைத்துக் கொண்டு எல்லா இடங்களுக்கும் சென்று, பல்வகை இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவித்தார். பௌ பௌவுக்கு 7 வயதான போது, தமது மகளை ஏற்றுக் கொண்டு, சாதாரண குழந்தைகளைப் போல் கல்வி பயின்று வளரச் செய்யக் கூடிய பள்ளி ஒன்றை அவர் தேடினார். ஆனால் அவரது விருப்பம் நிறைவேற்றப்படவில்லை.
பௌ பௌவுக்காக சிகிச்சையை நாடிய நாட்களில், உலகின் பல்வேறு இடங்களில் மூளைக்கடுத்த திமிர்வாதத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுடனும், அறநிலை மற்றும் நல வாழ்வு நிறுவனங்களின் அதிகாரிகளுடனும் வாங் பாங் பழகினார். அவர்களுடனான தொடர்பில், பல்வகை காரணிகளால் மூளைக்கடுத்த திமிர்வாதத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலர், குணமடைதலுக்கான சேவை மற்றும் பயிற்சிகளை உரிய நேரத்தில் பெறவில்லை என்பதால், காப்பாற்றப்பட்டு குணமடையும் நல்ல வாய்ப்பை இழக்கின்றனர் என்று அவர் கண்டறிந்தார். இந்த நிலைமையை மாற்றும் பொருட்டு, குணமடைதலுக்கான கல்வி மற்றும் சேவை வழங்கக் கூடிய ஒரு நிறுவனத்தை உருவாக்கும் எண்ணம் அவரது மனதில் ஏற்பட்டது. 2002ஆம் ஆண்டு ஜுன் முதல் நாளான சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அவர் எண்ணத்தில் இருந்த அந்த நிறுவனம் நிறுவப்பட்டது. தேவதை இல்லம் என வாங் பாங் அதற்கு பெயரிட்டார். "சிறப்பான குழந்தைகள் தேவதைகளாக இருப்பதை மேலதிக மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என விரும்புகின்றேன். தேவதை இல்லம் தேவதைகள் பிறக்கத் தொடங்கும் இடமாக மாற வேண்டும் என்றும் விரும்புகின்றேன். மேலும், சமூகத்தில் மேலதிக மக்கள் தேவதை போல் இந்தக் குழந்தைகளுக்கு கவனத்தையும் அன்பையும் காட்ட வேண்டும் என்றும் விரும்புகின்றேன்" என்றார் அவர். 1 2
|
|