• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-20 10:39:15    
வாங் பாங் அம்மையார் மற்றும் தேவதை இல்லம்

cri

தேவதை இல்லத்தின் வளர்ச்சிக்காக உயர் கல்வி நிலையத்திலான வேலையை வாங் பாங் கைவிட்டார். ஆனால் அது குறித்து அவர் வருத்தம் அடையவில்லை. ஒரு பகுதி சமூகப் பொறுப்பை தாம் ஏற்றுக் கொண்டதில் அவர் பெருமை அடைகிறார். அவர் பேசுகையில், தேவதை இல்லம் தனிநபருக்கு உரியது அல்ல. அது சமூகம் முழுவதற்கும் உரியது. சமூகம் அளித்த பொறுப்பை ஏற்று அன்பு நிறைந்த இந்த இலட்சியத்தில் தாம் ஈடுபடுவதாக அவர் தெரிவித்தார்.
"ஒவ்வொரு நாளும் குழந்தைகளுடன் பழகுகின்றேன். அவர்களின் எளிதான சொற்களிலும் வார்த்தைகளிலும் மனநிறைவு அடைகின்றேன். சில ஆண்டுகள் கடந்து, பெற்றோர்களில் சிலர் படிப்படியாக தன்னம்பிக்கையும் மகிழ்ச்சியும் அடைந்து, எதிர்காலத்தின் மீது எதிர்பாப்ப்பைக் கொண்டுள்ளனர். நானும் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன்" என்றார் அவர்.
தேவதை இல்லம் நிறுவப்பட்ட பின், வழிகாட்டல் முறையிலான கல்வி வாங் பாங்கினால் முதன்முறையாக குவாங் சி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் உட்புகுத்தப்பட்டது. மூளைக்கடுத்த திமிர்வாதத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குணமடைய உதவுவதை அவர்கள் கல்வி பெறுவதுடன் இணைக்கும் இந்த முறை நல்ல பயன் தந்துள்ளது.

5 வயதான பெண் குழந்தை சியன் சியன், இரண்டு ஆண்டுகளுக்கு முன் குணமடைதலுக்கான பயிற்சி பெற தனது தாயுடன் தேவதை இல்லத்துக்கு வந்தார். அவரது தாய் கூறியதாவது—
"முன்பு அவரால் தலையை உயர்த்த முடியாது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலான சிகிச்சை மூலம், இப்போது அவரது தலை மெதுவாக நிமிர முடியும். இங்கு வந்த பின் அவர் மகிழ்ச்சி அடைகிறார். மகிழ்ச்சியாக இருந்த போது அவர் குரல் எழுப்புவார். இத்தகைய நிறுவனத்துக்கு வந்தது நல்லது" என்றார் அவர்.
கடந்த 6 ஆண்டுகளாக, தேவதை இல்லம், மூளைக்கடுத்த திமிர்வாதத்தினால் பாதிக்கப்பட்ட 80க்கு அதிகமான குழந்தைகளுக்கும் நாட்டின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த 500க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கும், குணமடைதல், கல்வி, வாழ்க்கை பராமரிப்பு, சமூகத் தொடர்புக்கான வழிகாட்டல், பெற்றோருக்கான பயிற்சி உள்ளிட்ட சேவைகளை வழங்கியுள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் குழந்தைகளுக்கு கூட, தேவதை இல்லம் குணமடைதலுக்கான பயிற்சியை வழங்குகிறது.
தேவதை இல்லம் நிறுவப்பட்ட பின் உலகின் பல்வேறு இடங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலக சுகாதார அமைப்பு, World Vision என்ற சமூக சேவை நிறுவனம், ஹாங்காங் வானவில் திட்டப்பணி உள்ளிட்ட நிறுவனங்கள் தேவதை இல்லத்தின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக உதவியளித்துள்ளன. அதே வேளையில் சமூகத்தின் பல்வேறு துறைகளும் தொடர்ந்து தேவதை இல்லத்துக்கு நன்கொடை வழங்கி வருகின்றன.
மூளைக்கடுத்த திமிர்வாதத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குணமடைதல், கல்வி, பயிற்சி உள்ளிட்ட சேவையை வழங்கக் கூடிய பெரிய பள்ளி ஒன்றை உருவாக்குவது என்பது தமது மிகப் பெரிய விருப்பமாகும் என்று வாங் பாங் கூறினார்.
"இந்தக் குழந்தைகள் ஒரு வகை தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொண்டு, சமூக நடைமுறையில் பங்கெடுக்கக் கூடிய வாய்ப்பைப் பெற வேண்டும் என்று விரும்புகின்றேன். லாப நோக்கற்ற கொள்கையில் மென்மோலும் அதிகமான தேவதை இல்லங்கள் நிறுவப்பட வேண்டும் என்று விரும்புகின்றேன்" என்றார் அவர்.
1 2