• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-27 09:49:35    
தேசிய மக்கள் பேரவை பிரதிநிதி Bi Hong Zhen அம்மையார் பற்றி

cri
1980ஆம் ஆண்டுகளில் பிறந்த Bi Hong Zhen அம்மையார், சீனத் தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியாக திகழ்கின்றார். 1999ஆம் ஆண்டு மேனிலை பள்ளி கல்வி பெற்ற அவர் சொந்த ஊர் திரும்பினார். அவரது கிராமத்தில் ஐந்து நாட்களுக்கு ஒரு முறைதான் சந்தை நடைபெறுகிறது. சந்தையில்தான் தேவைப்படும் அனைத்து பொருட்களையும் கிராம மக்கள் வாங்க முடியும் என்ற நிலை இருந்தது. எனவே சிறு கடை ஒன்றைத் திறந்து வைக்கும் எண்ணம் Bi Hong Zhenக்கு ஏற்பட்டது. அதன் படி கடையும் திறந்தார். அவர் கூறியதாவது:
"கடை துவங்கிய போது நாள்தோறும் இரண்டு முதல் மூன்று யுவான் பொருட்கள்தான் விற்றன. மிகவும் கவலைபட்டேன். இக்கடையை செவ்வனே நடத்தி செல்ல, விற்கப்படும் பொருட்களின் தரத்தில் பொது மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும் என்று கருதினேன்" என்றார், அவர்.
அவரது கடையில் விற்கப்பட்ட பொருட்கள் தரமிக்கவையாக இருந்தன.

பொருட்களின் விலையும் நியாயமாகவே இருந்ததால் அவருடைய கடை விரைவாக மக்களின் நம்பிக்கையை பெற்றது. 2 ஆண்டுகளுக்குள், இக்கடை 15 சதுர மீட்டரிலிருந்து நூற்றுக்கு அதிகமான சதுர மீட்டர் வரை விரிவாகியது. தரமிக்க பொருட்கள் மற்றும் நியாயமான விலையைத் தவிர, சேவையிலும் Bi Hong Zhen மிகவும் கவனம் செலுத்துகிறார். விவசாயிகள் தமது கடையில் தரமிக்க பொருட்களை வாங்குவது மட்டுமல்ல, அவர்கள் பொருட்களை வாங்கி செல்லும் போது மனநிறைவோடு மகிழ்ச்சியாக செல்லவே அவர் விரும்புகிறார். Bi Hong Zhenவின் கடையில் பொருட்களை வாங்க விவசாயிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியது. கடையின் வியாபாரமும் மென்மேலும் விறுவிறுப்பாகியது.
2003ஆம் ஆண்டு, நகரங்களில் வேலை செய்யும் விவசாய தொழிலாளர்கள் செல்லிடபேசி பயன்படுத்துவதையும், அவர்கள் செல்லிடப்பேசியோடு சொந்த ஊர் திரும்புவதையும் அவர் தெரிந்து கொண்டார். எனவே தொலைபேசிகளும் செல்லிடபேசிகளும் கிராமங்களில் மிக விரைவாக பரவக்கூடும் என்று அவர் எண்ணினார். தவிர, தொலைபேசி கட்டணம் செலுத்துதல் மற்றும் இதர அலுவல்களை நிறைவேற்ற கிராமங்களில் சரியான வசதி இல்லை என்றும் அவர் கண்டறிந்தார். தொலைபேசி கட்டணம் செலுத்த, விவசாயிகள் பத்து யுவான் செலவளித்து, நகருக்கு செல்ல வேண்டியிருந்தது. இதனால் தொலைபேசி மற்றும் செல்லிடபேசி கட்டணம் செலுத்துதல் தொடர்பான சேவையை தமது கடையில் தொடங்க அவர் விரும்பினார்.
Bi Hong Zhen நடத்தும் கடை, தொலைபேசி நிறுவனத்தின் நம்பிக்கையைப் பெற்றது. இக்கடையில் தொலைபேசி தொடர்பான சேவைகளும் அலுவல்களும் விரிவாகின. இரண்டு ஆண்டுகளுக்கு பின், சீன செல்லிடப்பேசி மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவை மையம் இக்கடையில் நிறுவப்பட்டது. தற்போது அருகிலுள்ள விவசாயிகள், கட்டணத்தைச் செலுத்தவும், தொலைபேசி மற்றும் செல்லிடபேசி இணைப்பு பெறும் அலுவல்களை மேற்கொள்ளவும், நகருக்குச் செல்ல தேவையில்லை.
மேலும், விவசாயிகளுக்கு செவ்வனே சேவை புரியவே Bi Hong Zhen விரும்புகிறார். விவசாயிகளின் செல்லிடபேசி கட்டணத்தைக் குறைக்க, சீன செல்லிடபேசி மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு அவர் பலமுறை சென்று, விவசாயிகள் விலை மலிவான செல்லிடபேசி தொடர்பு அட்டையைப் பெற விண்ணப்பித்தார்.
விவசாயிகள் வெளியூர்களுடன் தொடர்பு கொள்ளும் "தகவல் மேடை"யாக Bi Hong Zhenவின் கடை படிப்படியாக மாறியுள்ளது. தங்களால் புரிந்து கொள்ள முடியாத சிக்கல்கள் தோன்றுகிற போது, விவசாயிகள் இக்கடைக்குச் சென்று, இணையத் தளம் மூலம் தொடர்புடைய தகவல்களை தேடுமாறு Bi Hong Zhenயை கேட்டுக்கொள்கின்றனர். Bi Hong Zhen எப்போது அவர்களுக்கு உதவி செய்கிறார்.
இவ்வாறு, Bi Hong Zhenவின் கடை, உள்ளூர் சேவை மையமாக மாறியுள்ளது. இன்னல்கள் ஏற்படும் போது, உதவி பெற விவசாயிகள் இக்கடைக்கு அடிக்கடி செல்கின்றனர்.
பல்லாண்டுகள் விவசாயிகளுக்கு சேவை புரிந்து வருவதால், Bi Hong Zhen உள்ளூர் மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்துள்ளார். எனவே 2007ஆம் ஆண்டு, 11வது சீனத் தேசிய மக்கள் பேரவை பிரதிநிதியாக Bi Hong Zhen தேர்ந்தெடுக்கப்பட்டார். தமது கடமை பற்றி Bi Hong Zhen கூறியதாவது:
"தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், பெரும் நிர்ப்பந்தத்தை எதிர்நோக்குகின்றேன். குறிப்பாக கூட்டத்தொடருக்கு பின் எந்த முறையில் இக்கூட்டத்தொடர் பற்றி ஊர் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதை சிந்திக்கும் போது, பெரும் நிர்ப்பந்தத்தை உணர்ந்து கொள்கின்றேன்" என்றார், அவர்.
1 2