• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-27 09:49:35    
தேசிய மக்கள் பேரவை பிரதிநிதி Bi Hong Zhen அம்மையார் பற்றி

cri

கடந்த ஆண்டு 11வது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் முடிவுக்கு வந்த பின், Bi Hong Zhen ஊர் திரும்பினார். ஒரு வாரத்தில், Ping Liang நகரின் ஏழு மாவட்டங்களில் அவர் அறிக்கை வழங்கினார். கூட்டத்தொடரில் தமக்கு கிடைத்த அனுபவம் பற்றி ஊர் மக்களுக்கு அவர் தெரிவித்தார். இது ஊர் மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.
கடந்த ஆண்டு தலைமையமைச்சர் வென் சியாபாவ், Gan Su மாநிலத்தின் பிரதிநிதிக்குழுவினருடன் விவாதித்தது அவரது மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. அவர் கூறியதாவது:
"தலைமையமைச்சரைச் சந்தித்ததும், 'வணக்கம், நான் Gan Su மாநிலத்தின் Ping Liang நகரைச் சேர்ந்த Hui இன பிரதிநிதியாக இருக்கின்றேன்' என்று கூறினேன். என் மூலம் ஊர் மக்களுக்கு வணக்கங்களை தலைமையமைச்சர் தெரிவித்தார். அவர் கூறிய ஒரு வார்த்தை என்னை மனமுருகச்செய்தது. 'கடந்த ஆண்டு உங்கள் ஊரில் பனி சீற்றம் கடுமையாக இருந்ததா' என்று தலைமையமைச்சர் கேட்டார். அப்போது நான் மிகவும் மனமுருகி போனேன்" என்றார், அவர்.
ஊர் மக்களுக்கு அறிக்கை அளி்த்த போது பலர் இதைக் கேட்டு மனமுருகி கண்ணீர் வடித்தனர். குறிப்பாக, Gan Su மாநிலத்தின் பல பிரச்சினைகளில் தலைமையமைச்சர் காட்டிய கவனத்தையும், கிராமங்களில் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கொள்கைகளின் செயல்பாட்டில் அவர் காட்டிய அக்கறையையும் அறிந்த போது, அவர்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

Bi Hong Zhen தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டப் பின், அவர் பொது மக்களுடன் தொடர்பு கொண்டு, மக்களின் கருத்துக்களைத் திரட்டும் தொடர்பு இடமாக அவரது கடை மாறியுள்ளது. விவசாயிகளுக்கு சேவை வழங்கி, அவர்களுடன் உரையாடும் போது, அவர்களின் விருப்பத்தைப் பதிவு செய்கிறார். பல்வேறு நிலை மக்கள் பேரவை ஏற்பாடு செய்யும் ஆய்வு பணியில் கலந்து கொண்டதைத் தவிர, சொந்த செலவில் இதர கிராமங்களிலும் ஆய்வு செய்தார். இவ்வாண்டு இவ்விரு கூட்டத்தொடர்கள் நடைபெற்றபோது, ஊர் மக்களின் சார்பில் பல யோசனைகளை அவர் முன்வைத்தார். அவர் கூறியதாவது:
"சாலை தொடர்பான பிரச்சினையில் அவர்கள் மிகவும் கவனம் செலுத்துகின்றனர். கிராமங்களில் சாலை பிரச்சினை, மிகவும் முக்கியமான பிரச்சினை. செழிப்படைய வேண்டுமானால், சாலையை முதலில் கட்டியமைக்க வேண்டும். குறிப்பாக மேற்குப் பகுதியில் உள்ள மலைப் பிரதேசங்களில், சாலை பிரச்சினை மிகவும் முக்கியமானது. சாலை இல்லாததால், மலையில் சிக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. வெளியுலகை அறிந்து கொள்ள முடியவில்லை. சாலை இருந்தால்தான், இங்குள்ள வளத்தை இதர பிரதேசங்களின் மக்களுடன் கூட்டாக பகிர்ந்து கொள்ள முடியும்" என்றார், அவர்.
சீன வானொலி நிலையத்தின் ஒலிபரப்பு நிகழ்ச்சிகள் மற்றும் இணையத் தள செய்தி சேவை மூலம், மேலதிக நண்பர்களை அறிந்து கொள்ள முடியும் என்பதில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் கூறினார். வாய்ப்பு இருந்தால், நண்பர்கள் தமது ஊருக்கு வருகை தருவதற்கு அவர் அழைப்பு விடுத்தார்.
1 2