
உலகளவில் அதிக செல்வாக்கை ஏற்படுத்தும் இன்னொரு கண்டுபிடிப்பு சி கால்கள் என்ற Microprocessor என்ற நுண்செயலி இணைந்த செயற்கை கால்கள். உடல் சவாலுடையோருக்கு தான் அவ்வுறுப்புக்களின் உண்மையான பயன்பாடு தெரியும். எக்குறையும் இல்லாதோர் அதைபற்றி கண்டு கொள்வதில்லை. குறிப்பாக நமது கைகயில் உள்ள 5 விரல்களில் பெரு விரலை பயன்படுத்தாமல் ஒரு பொருளை எடுக்க முயற்சியுங்கள். அப்போது தான் பெரு விரலின் தனிப்பட்ட பயன்பாடு என்னவென்று தெரியும். அதுபோல கால்களில் சவாலுடையோர் கீழிறங்குவது, நடந்து செல்வது போன்ற எல்லா செயல்பாடுகளுக்கும் சிந்திக்க தான் வேண்டும். அதனை எளிதாக்கும் வகையில் செயற்கை கால் பொருத்தப்படுகிறது. செயற்கை காலில் மிக முக்கியமானது காலின் முழங்கால் மூட்டுப் பகுதி. கட்டை போன்ற செயற்கை கால் முழங்கால் மூட்டை மடக்கி, எழும்புகின்ற வகையில் செயல்பட முடியாமல் நேராக இருக்கும். இதை கொண்டு நடமாடுகின்ற சிலரை நாம் சந்தித்திருக்காலம். செயற்கை கால் பொருத்துகின்ற மருத்துவ நுட்பத்தில் அறிவார்ந்த கட்டுப்பாடு கொண்ட மற்றும் தேவைகேற்ப செயல்படும் திறமை கொண்ட செயற்கை காலான சீ கால் என்பது, கால் உறுப்புகளில் சவால் கொண்டு இயங்க துன்பப்படுகின்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை கொண்டு வந்தது. இதன் மூலம் கால் மூட்டு இயக்கங்கள் மிகவும் எளிதாகின. Microprocessor எனப்படுகின்ற நுண்செயலியை பயன்படுத்தி வடிவமைக்கப்படுகின்ற இந்த செயற்கை கால்கள் எல்லா வகையான இயக்கங்களுக்கும் ஏதுவாக அமைகின்றது. 1997 ஆம் ஆண்டில் Otto Bock நலவாழ்வு அமைப்பு உலக எலும்பியல் மற்றும் புனர்வாழ்வு தொழில் நுட்ப மாநாட்டில் புத்தாக்கமான செயல்பாட்டை முன்வைத்தது. அதன் பின்னர் தான் வினாடிக்கு 50 முறை செயல்படும் உணர்வறிகின்ற கட்டுபாட்டு கருவிகள் மற்றும் Microprocessor எனப்படுகின்ற நுண்செயலி இணைக்கப்பட்ட செயற்கை கால்களான சி கால்கள் மனிதனின் இயங்கத்திற்கும், எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏதுவானதாக பயன்படுத்தப்பட தொடங்கின. ஜெர்மனியின் உயர்ந்த சமூக காப்பீட்டு கழகத்தின் விதிகளின் படி, செயற்கை கால்கள் பொருத்தப்படுவது சட்டபூர்வ உரிமையாகியுள்ளது. உலகளவில் 11,000 பேர் தற்போது இத்தகைய செயற்கை கால்களை நம்பி வாழ்கின்றனர். அத்தோடு செயற்கை கால்களை பயன்படுத்தும் மக்கள் உலகளவில் பெருகி வருகிறார்கள். 1 2 3
|