• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-03 09:11:56    
திபெத்தின் கல்வி -4

cri

19வது நூற்றாண்டில், அரசியல் மற்றும் மதம் இணைந்த திபெத் நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையை கொண்ட சமூகம், நாளுக்கு நாள் ஊழலும் சீர்கேடும் கொண்டதாக மாறியது. துறவிகள் பலர் தங்களது கவனத்தை கீழ்த்தரமான விவகாரங்களில் செலுத்தினர். அத்துடன், அரசியல் நடவடிக்கையில் பங்கெடுக்கும் அவர்களது ஆர்வம் பெரிதும் அதிகரித்தது. துறவிகளுக்குள்ளும், துறவிகளுக்கிடையிலும் அதிகாரப் போராட்டங்கள் பல நிகழ்ந்தன. அமைதியான துறவியர் மடங்கள், அதிகாரப் போராட்டம் நிகழும் இடங்களாக மாறின. புத்தமதக் கவ்வி, மேம்போக்கான வடிவத்தில் நடைபெற்றது. உயர் குடி குடும்பங்களில் பிறந்த மதத் துறவிகள் பல்வேறு இடங்களில் சுற்றலா மேற்கொண்டு, சூதாட்டத்தில் ஈடுபட்டு, புகைபிடித்து, அதிகாரத்தை பயன்படுத்தி மற்றவதை துன்புறத்தினர். மாறாக, அடிமை குடும்பங்களில் பிறந்த துறவிகள் கிராமப்புறங்களில் மதத் திருமறை ஓதிக்கொண்டு, மற்றவரை அண்டி வாழ்ந்து கொண்டிருந்தனர். திபெத்தின் பல கோயில்களில் புத்த மத விதிகளில் வீழ்ச்சி நிலைமை காணப்பட்டது. பணத்தைக் கொண்டு அதிகாரத்தை பெறுவது, பணத்தை கொண்டு பட்டத்தை வாங்குவது போன்றவை கோயில்களில் அடிக்கடி நிகழ்ந்தன.

லாசா நகரிலுள்ள 3 முக்கிய பெரிய கோயில்களிலான உயர்நிலை துறவிகள் மீது, அப்போதைய 13வது தலாய் லாமா Thubten Gyatso, கடுமையான எச்சரிக்கையை விடுத்தார். உயர்நிலை துறவிகள் கோயில்களின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். அத்துடன், விதிகளை மீறியவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுப்பதாக அவர் அறிவித்தார். 1913ம் ஆண்டு, கோயில்களுக்கான நிர்வாகத்தை வலுப்படுத்த, 13வது தலாய் லாமா Thubten Gyatso சிறப்பு விதிகளை வெளியிட்ட போதிலும், சீர்கேட்டு நிலைமை தடுத்துக் கட்டுப்படுத்தப்படவில்லை. பக்கசார்பும், சீர்கேடுகளும் மேலும் கடுமையாயின. 1929ம் ஆண்டு, Lharamba Geshi என்ற பட்டம் பெறுவதற்கான தேர்வை 13வது தலாய் லாமா தானே நேரடியாக கண்காணித்தார். அதன் மூலம், இத்தேர்வில் கலந்து கொண்டவர்கள் பலர் மிகவும் குறைவான தகுதியுடையவர்களாக அவர் கண்டறிந்தார். இன்னும் சொல்லப்போனால், அவர்களுக்கு இத்தேர்வில் கலந்து கொள்ளும் தகுதியே இருக்கவில்லை. லஞ்ச ஊழலில் ஈடுபட்ட கோயில்களின் தலைவர்கள் மீது 13வது தலாய் லாமா கடுமையான தண்டனை நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதற்கு பிந்தைய சில ஆண்டுகளில், குழப்பநிலையில் இருந்த கோயில்களை அவர் தொடர்ந்து சீர்திருத்தம் செய்தார். சில துறவிகள் ஓரளவில் கட்டுப்பாடாக இருந்த போதிலும், பெரிதாக எந்த பயனும் கிடைக்கவில்லை.

1 2