20வது நூற்றாண்டின் துவக்கத்தில், பிரிட்டன் ஏகாதிபத்திய சக்தி திபெத்தில் ஆக்கிரமிப்பு செய்தது. திபெத்தை சீனாவிலிருந்து பிரித்து, அதை பிரிட்டனின் குடியேற்றப்பகுதியாக மாற்ற பிரிட்டன் முயன்றது. 13வது தலாய் லாமா Thubten Gyatso, திபெத் மக்களுக்கு தலைமை தாங்கி, முன்னேறிய இராணுவ தளபாடங்களை கொண்ட பிரிட்டன் படைக்கு எதிரான போராட்டத்தை நடத்தினார். எண்ணற்ற உயிர் பலிகொடுத்ததால், பிரிட்டன் ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சி தோல்வியில் முடிந்தது. போராட்டத்தின் போது, Thubten Gyatso சீன உள் பிரதேசத்திலும் இந்தியாவிலும் 2முறை பயணம் மேற்கொண்டார். நவீன அறிவியல் தொழில் நுட்பம் குறைவு என்பது, திபெத்தின் பின்னடைவு நிலைமைக்கான காரணமாகும் என்று இவ்விரண்டு பயணங்கள் மூலம் அவர் ஆழமாக உணர்ந்து கொண்டார்.
இதற்கு பின், திபெத்தின் கல்வியை வளர்ப்பது, அறிவியல் தொழில் நுட்ப திறமைசாலிகளுக்கு பயிற்சியளிப்பது ஆகியவை பற்றிய ஒரு தொகுதி நடவடிக்கைகளை 13வது தலாய் லாமா திபெத்தில் நடைமுறைப்படுத்தினார். திபெத்தின் மாவட்ட நிலை இடங்களிலும் திபெத் மொழி துவக்கப்பள்ளி்களை நிறுவவும். சமூகத் தகுநிலை ஏது வாயினும், திபெத் இன குழந்தைகளும் துவக்கப்பள்ளிகளில் அதில் கற்றுக் கொள்ளவும். ஆசிரியர்களின் ஊதியத்தை அரசே வழங்கவும் அவர் கட்டளையிட்டார். ஆனால், அப்போதைய நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறை, உயர்நிலை பழமைவாத சக்திகளின் எதிர்ப்பு ஆகிய காரணங்களால், இந்த முடிவு முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. சிறுபான்மையினர் வாழும் இடங்களில் துவக்கப்பள்ளிகள் பெயரளவுக்கு நிறுவப்பட்டன. ஆனால் பெரிதும் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும், திபெத் மொழியின் பரவலுக்கும் திபெத்தின் கல்வி நிலையின் உயர்வுக்கும் Thubten Gyatsoஇன் நடவடிக்கை ஆக்கப்பூர்வ பங்காற்றியது. 1 2
|