டிராகன் மற்றும் ஃபீனிக்ஸ் பறவை வளையல்கள்


வாழ்நாளின் சிறப்பான ஒரு நாளான திருமண நாளின் போது மணமகள். பூத்தையலால் அழகுபடுத்தப்பட்ட ஆடையையும், மினுமினுக்கும் நகைகளையும் அணிந்து தன்னை அழகுபடுத்திக்கொள்வர். டிராகன் மற்றும் ஃபீனிக்ஸ் பறவைகள் பதித்த வளையல்கள், திருமணத்தின் போது மணமகள் அணியும் முக்கிய அணிகலனாய் இருந்தது. சீனப் பாரம்பரியத்தின் படி திருமணம் முடிக்கும் இணையின் பெற்றோர் அவர்களுக்கு ஓரிணை டிராகன் மற்றும் ஃபீனிக்ஸ் பறவை வளையல்களை தருவதுண்டு. இது அழியாத காதலை, அன்பை அடையாளப்படுத்துகிறது. டிராகன் எனும் பறவைநாகமும், ஃபீனிக்ஸ் எனும் தீயில் சுட்டாலும் சாம்பலிலிருந்து உயிர்பெற்று எழும் பறவையும் அழகிய உருவங்களாக பொறிக்கப்பட்ட அல்லது செதுக்கப்பட்ட வளையல்கள், தங்கத்திலும் செய்யப்பட்டதுண்டு. ஒரு சிலவற்றில் இரு உருவங்களும் இரண்டிலும் பொறிக்கப்படும், மற்றவற்றில் ஒன்றில் டிராகனும், மற்றதில் ஃபீனிக்ஸ் பறவையுமாக பொறிக்கப்படும்.

இப்படியான இரண்டு வளையலும் வெவ்வேறாக அமைந்தபோது, மணமகன் டிராகன் உருவம் பொறித்த வளையலை அணிய, மணமகள் ஃபீனிக்ஸ் உருவம் பொறித்த வளையலை அணிவாள். இது, இருவரும் எப்போதும் நீங்காமல் இணைந்து வாழவேண்டும் என்ற வாழ்த்தை அடையாளப்படுத்துகிறது.
1 2
|