மேண்டரின் வாத்து போர்வை


இரட்டை வாத்துகள் என்று முன்னாளில் அழைக்கப்பட்ட மேண்டரின் வாத்துகள், வாழ்நாள் முழுதும் இணைபிரியாமல் வாழ்பவை. ஒன்றாக பறந்து, ஒன்றாக நீந்தி, ஒன்றாக ஓய்வெடுத்து இணைபிரியாமல் வாழும் இந்த இரட்டை வாத்துகளில், ஒன்று இறந்துபோனால், மற்றது வேறு ஒரு இணையை தேடாது. தனியே தொடர்ந்து வாழும். எனவே இவை அழியாத காதலுக்கும், திருமணத்துக்குமான அடையாளங்களாக, சின்னங்களாக கருதப்படுகின்றன. ஆகவே திருமணங்களில் பல பொருட்கள், அன்பளிப்புகள் ஆகியவற்றில் இரட்டை வாத்து படம் பொறித்திருப்பதை காணமுடியும். குறிப்பாக இரட்டை வாத்து உருவம் அல்லது படம் கொண்ட போர்வைகள், தலையணைகள், ஆடைகள் மிகப் பரவலாக காணப்படுவதுண்டு. இரட்டை வாத்துகளும், குளிர்கால மல்லிகையும் கொண்ட படங்கள் பாதுகாப்பான, அமைதியான திருமணத்திற்கான வாழ்த்தை அடையாளப்படுத்துகின்றன. அல்லி மலர்கள் சூழ நீரில் நீந்தும் இரட்டை வாத்துகள் கொண்ட படம், திருமண இணைக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற வாழ்த்துகிறது. 1 2
|