
தற்போது, அந்த 3 செயற்கைக் கோள்களில் 2 இன்னும் அவற்றின் சுற்றுவட்டப் பாதையில் இயல்பாக இயங்கி வருகின்றன. இரவிலும் பகலிலும் அவை பூமியைக் கண்காணித்து, உயர் வேக தகவல் அனுப்பும் தொகுதி மூலம், தரவுகளை பூமிக்கு அனுப்பி வருகின்றன. இந்த தரவுகள் கையாளப்பட்டு பல்வகை படங்களாகும் ஆவணங்களாகவும் மாற்றப்பட்டு, அரசு வாரியங்களுக்கு கொள்கை தீர்மானத்துக்கான தகவல்களை வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக, வேளாண் துறையில், சீனாவில் வேளாண் பயிர் செய் நிலப்பரப்பு, வளர்ப்பு நிலைமை மற்றும் விளைச்சல் பற்றிய மதிப்பீட்டில் அவை பயன்படுத்தப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக, வேளாண் துறையில் புவி வள ஆய்வு செயற்கைக் கோள்கள் அனுப்பிய அதிகக் கண்காணிப்பு தரவுகளைப் பயன்படுத்தியுள்ளனர் என்று சீன சான் சி மாநிலத்தின் தொலை உணர்வறி வசதி மையத்தின் தலைவர் லீ வென் கெ கூறினார். அவர் கூறியதாவது
சீன-பிரேசில் புவி வள ஆய்வு செயற்கைக் கோள்களுக்கு சில தனிச்சிறப்புக்கள் உண்டு. ஒன்று, அதன் தயாரிப்புச் செலவு, பிரான்ஸின் SPOT, அமெரிக்காவின் TM ஆகிய செயற்கைக்கோள்களை விட மிக மலிவானது. இரண்டு, அவை அனுப்பிய தரவுகளை நாம் உரிய நேரத்தில் சரியாகவும் பயன் தரும் முறையிலும் பெறலாம். மூன்று, அவற்றின் தீர்க்கமான படங்களின் உதவியுடன் வேளாண் துறை உற்பத்தியின் தேவையை நிறைவேற்றலாம் என்றார் அவர்.
தவிர, இயற்கை சீற்றங்கள் பற்றிய கண்காணிப்பு, நகரத் திட்டம் முதலிய துறைகளில் சீன-பிரேசில் புவி வள ஆய்வுச் செயற்கைக் கோள்கள் ஆற்றிய பங்கு நாளுக்கு நாள் தெளிவாகி வருகின்றது. எடுத்துக்காட்டாக, 2008ம் ஆண்டு மே திங்களில் சீன சி ச்சுவான் மாநிலத்தின் வென் சுவான் மாவட்டத்தில் ரிக்டர் அளவில் 8.0 ஆக பதிவான கடும் நிலநடுக்கம் நிகழ்ந்தது. இதற்குப் பின், அந்தச் செயற்கைக் கோள்கள் அனுப்பிய தரவுகளின் மூலம் சீன அரசின் தொடர்புடைய வாரியங்கள் பாதிக்கப்பட்டப் பிரதேசங்களின் நில வியல் நிலைமையைக் கண்காணித்தன. நிலநடுக்கம் ஏற்பட்ட பாதிப்பு நிலைமையை அறிந்து கொள்வதற்கு இந்தத் தரவுகள் செயலாக்க பங்காற்றியுள்ளன என்று சீன மூலவளச்செயற்கைக் கோள்களின் பயன்பாட்டு மையத்தின் தலைவர் guo jian ning தெரிவித்தார்.
பிரேசிலிலும், அந்தச் செயற்கைக் கோள்கள் பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக, அமேசான் மழைக்காடு மீதான கண்காணிப்பு மற்றும் வனத்தில் மரம் வெட்டுவதைக் கட்டுப்படுத்துவதில் அவை பயன் தரும் பங்காற்றியுள்ளன. புள்ளிவிபரங்களின் படி, இதுவரை பிரேசிலின் 15 ஆயிரத்துக்கு அதிகமான நிறுவனங்கள் இந்தச் செயற்கைக் கோள்கள் அனுப்பிய தரவுகளைப் பயன்படுத்தியுள்ளன.
சீன-பிரேசில் புவி வள ஆய்வுச் செயற்கைக் கோள்களின் மீது பல நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன என்று சீனத் தேசிய மூலவள ஆய்வு செயற்கைக் கோள்களின் பயன்பாட்டு மையத்தின் தலைவர் guo jian ning கூறினார். அவர் கூறியதாவது
இதுவரை, சீன-பிரேசில் புவி வள ஆய்வுச் செயற்கைக் கோள்கள் ஆய்வு முறையில், நார்வே, ஸ்வீடன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் தரவுகளை அனுப்பியுள்ளன. தவிர, சீனத் தேசிய விண்வெளிப் பயண ஆணையத்தின் தலைமையில், அவற்றினூடாக, பிரான்ஸுடன், தொலை உணர்வறி மூல நோய் கண்காணிப்பு, உயிரின சுற்றுச்சூழல் பரிசோதனை முதலிய துறைகளில் பல ஆண்டுகளாக ஒத்துழைப்பு மேற்கொண்டுள்ளோம் என்றார் அவர்.
1 2 3
|