|

இது மட்டுமல்ல, அந்தச் செயற்கைக் கோள்கள் சர்வதேச அமைப்புகள் மேற்கொண்ட தொடர்புடைய ஆய்வு திட்டங்களிலும் பங்கேற்றுள்ளன. 2007ம் ஆண்டின் இறுதியில், அவற்றின் மூலம், விண்வெளி மற்றும் கடும் சீற்றங்கள் பற்றிய சர்வதேச சாசனத்தில் சீன அரசு சேர்ந்து, உலகளவில் கடும் சீற்றங்களைக் கண்காணிப்பதற்கு சேவை புரியும் கடப்பாட்டை ஏற்றுள்ளது.
சீனாவும் பிரேசிலும் தொடர்புடைய நாடுகளும் செயற்கைக் கோள்கள் பற்றிய பயன்பாட்டுத் துறையிலான ஒத்துழைப்பை மேலும் ஆழமாக்க வேண்டும் என்று சீனாவிலுள்ள பிரேசிலின் தூதரக அதிகாரி லுசினியா அம்மையார் விருப்பம் தெரிவித்தார். அவர் கூறியதாவது
கடந்த 20 ஆண்டுகளில், சீன-பிரேசில் புவி வள ஆய்வு செயற்கைக் கோள்கள் வளரும் நாடுகளை உள்ளிட்ட பல சர்வதேச பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ளன. இந்த ஒத்துழைப்புறவு புதிய சீன-பிரேசில் புவி வள ஆய்வு செயற்கைக் கோள்கள் மூலம் வலுப்படுத்தப்பட்டு ஆழமாக்கப்பட வேண்டும் என்று விரும்புகின்றோம் என்றார் அவர். 1 2 3
|