• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-10 11:21:50    
Yixiluozhuiஇன் கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்

cri

சீன திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் லாசா நகரிலுள்ள போத்தலா மாளிகைக்கு அருகிலான பழைய நகர வட்டாரத்தில், திபெத் பாணியுடைய ஒரு குடியிருப்புப் பகுதி இருக்கிறது. இங்கு, 74 வயதான Yixiluozhui அமைதியாகவும், இன்பமாகவும் வாழ்கின்றார்.

பழைய திபெத்தின் நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையின் கீழான ஒரு அடிமைக் குடும்பத்தில், பிறந்தவர் Yixiluozhui. அப்போதைய அனைத்து அடிமைக் குடும்பங்களின் குழந்தைகளையும் போன்று, பெற்றோரால் வளர்க்கப்பட்ட முடியாத அவரும், அடிமைகளில் ஒருவராக மாறினார். அப்போது, அவரது பெற்றோர், மாட்டுச் சாணத்தை அகற்றுவது, உயர் குடி மக்களுக்கு நீர் இறைத்து கொடுப்பது ஆகியவற்றின் மூலம், வாழ்க்கை நடத்தினர். அவர்களுக்கு போதிய உணவுப் பொருட்களும் ஆடைகளும் இருக்கவில்லை. பண்ணை அடிமைச் சொந்தகாரர்கள், மாளிகைகளில் தங்கியிருந்தனர். ஆனால், அடிமைகளோ, தலைமுறைத் தலைமுறையாக குதிரைகள் கட்டப்படும் லாயங்களில் முடங்கிக் கிடந்தனர். அப்போது அவர்கள், மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ வேண்டியிருந்தது.

திபெத் அமைதியாக விடுதலை செய்யப்பட்ட பின், குறிப்பாக, 1959ம் ஆண்டு ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின், திபெத்தில் அரசியல் மற்றும் மதம் ஒருங்கிணைந்த நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறை முற்றிலும் நீக்கப்பட்டது. அடிமைகள் விடுதலை செய்யப்பட்டு, நாட்டின் உரிமை குடிமக்களாக மாறினர். நடுவண் அரசால் திறந்து வைக்கப்பட்ட திபெத்தின ஊழியர் பள்ளியில் Yixiluozhui சேர்ந்து, முறையாகப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றார். பள்ளியில் கல்வி பயின்ற பின், அவர், தங்குதடையின்றி, லாசாவின் வரலாற்றில் முதல் தொகுதி போக்குவரத்து காவற்துறையினரில் ஒருவராக மாறினார்.

இரண்டு அமைப்பு முறைகளை அனுபவித்த அவருக்கு, பழைய மற்றும் புதிய சமூகங்கள் பற்றி சிறப்பான உணர்வு உண்டு. அவர் கூறியதாவது,

நான் 74 ஆண்டுகளாக லாசா நகரில் வாழ்ந்து வருகின்றேன். இந்நகரை விட்டு எங்கும் செல்லவில்லை. திபெத், பல ஆயிரம் ஆண்டுகால நீண்ட வரலாற்றைக் கொண்டது. ஆனால், தற்போதைய, திபெத் மக்களின் இன்பமான வாழ்க்கை, விரைவான சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி முதலியவை, வரலாற்றில் ஒருபோதும் கண்டிராதவை. 1959ம் ஆண்டு, திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பே, நாங்கள் தனிநபர் சுதந்திரத்தை பெற்றோம் என்று Yixiluozhui கூறினார்.

1 2