• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-10 11:21:50    
Yixiluozhuiஇன் கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்

cri

1963ம் ஆண்டு, லாசா நகரின் சேங்குவான் பிரதேசம் நிறுவப்பட்டது. Yixiluozhui அப்பிரதேசத்தின் குடியிருப்பு விவகார அலுவலகத்தில் பணி புரிய அனுப்பப்பட்டார். 1986ம் ஆண்டில், அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். அதற்குப் பின், சேங்குவான் பிரதேசத்தின் மக்கள் பேரவைப் பிரதிநிதியாக அவர் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நகர நிர்வாகம், நகரின் கட்டுமானம், மக்களின் வாழ்க்கை முதலிய பிரச்சினைகளுடன் தொடர்புடைய கருத்துருக்களை அவர் முன்வைத்துள்ளார். இந்தக் கருத்துருக்களில் பல, மேற்கொள்ளப்பட்டு, சுற்றியுள்ள மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உதவி செய்துள்ளன. அரிய, மதிப்புள்ள ஜனநாயக உரிமைகளை அவர் மிகவும் பேணிமதிக்கிறார். சிறிய ஒன்றிலிருந்து தொடங்கி, திபெத் மக்களின் வாழ்க்கையை மேலும் இன்பமாக மாற்றப் பாடுபட வேண்டும் என்று Yixiluozhui கூறினார்.

ஓய்வு பெற்ற பின், நான், குடியிருப்புப் பிரதேசத்தின் சில அடிப்படைப் பணிகளுக்குப் பொறுப்பேற்றுள்ளேன். மக்கள், என் மீது நம்பிக்கை கொள்கின்றனர். மக்களுக்கு எந்த நேரத்திலும், எந்த உதவிகளையும் நான் செய்வேன் என்று அவர் கூறினார்.

தற்போது, Yixiluozhui மற்றும் அவரது குடும்பத்தினர், திங்கள்தோறும் 7000 யுவான் வருமானத்தைப் பெறுகின்றனர். கடந்த ஆண்டு, அவர்கள் ஒரு இலட்சம் யுவானைச் செலவழித்து, விசாயமான ஒரு வீட்டை வாங்கி, இன்பமான வாழ்க்கை நடத்துகின்றனர். தற்போது, திபெத் பொருளாதாரம், நாட்டின் பொருளாதாரத்துடன் இணைந்து, கூட்டாக வளர்ந்துள்ளது. திபெத்தில் பல்வேறு துறைகள் பெரிதும் மேம்பட்டுள்ளன என்று Yixiluozhui கூறினார்.

கடந்த ஆண்டு, வென்ச்சுவான் மற்றும் தாங்சியோங் பிரதேசங்களில் நிலநடுக்கத்தை, எதிர்கொண்டோம். ஆனால், ஒவ்வொரு பேரிடருக்கு பின், சீன நடுவண் அரசு, அனைத்து ஆற்றலையும் அணி திரட்டி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து, அவர்களின் வாழ்க்கையையும் உற்பத்தியையும் மீட்க உதவியுள்ளது. பழைய திபெத்தில், ஷிகாசெ Jiang zi பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு நிகழ்ந்த போது, மக்களின் வீடுகள், விளை நிலங்கள் முதலியவை சீர்குலைக்கப்பட்டன. அப்போதைய அமைப்பு முறையில், அரசு எந்த உதவிகளையும் அளிக்கவில்லை. இது, நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறையிலான வாழ்க்கைக்கும், சோஷியலிச முறையிலான வாழ்க்கைக்கும் இடையிலான வேறுபாடாகும் என்று Yixiluozhui கூறினார்.


1 2