தமிழன்பன்: நீங்கள் அனுப்பிய கடிதங்களில் தெரிவிக்கப்பட்ட எண்ணங்களை அனைவருக்கும் அறிவிக்கும் இந்நிகழ்ச்சி, முன்பு நீங்கள் கேட்ட நிகழ்ச்சிகளை நினைவூட்டுவதாகவும் அமையும். கலை: சீன வானொலி நிகழ்ச்சிகள் பற்றிய உங்கள் கருத்துக்கள் நேயர்கள் அன்பர்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டுமென எண்ணுகிறீர்களா? கடிதம் மூலம் உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரிவியுங்கள். தமிழன்பன் இன்றைய நிகழ்ச்சிக்கு செல்லலாமா? கலை: சரி தமிழன்பன்: முதலில் கடிதப்பகுதி கலை: தென்பொன்முடி தெ.நா. மணிகண்டன் சீன தேசிய இனக்குடும்பம் பற்றி எழுதிய கடிதம். திபெத்தின் பாரம்பரிய மருத்துவ முறை சீனாவில் பெரும் வரவேற்பு பெற்று வருவதாக அறிந்தேன். பல்வேறு மருத்துவ முறைகள் அதிகரித்து வரும் சூழலில் திபெத் மருத்துவம் விரைவாக வளர தொடங்கியுள்ளதை இந்நிகழ்ச்சி அறிமுகப்படுத்தியது. திபெத் மருத்துவத்தின் பயன்கள் அதிகமாக இருப்பதால் தான் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது வெளிப்படையாக தெரிகிறது. சீனாவில் பாரம்பரிய திபெத் மருத்துவ மையங்கள் பெரும் அளவில் அதிகரித்து வருவதை அறியும்போது, அத்தகைய மருத்துவ முறையால் ஏற்படும் பயன்கள் வியக்கதக்க செய்தியாக உள்ளன.
தமிழன்பன்: அடுத்ததாக சேந்தமங்கலம் பி சரண்யா எழுதிய கடிதம். சீனக் கதை நிகழ்ச்சி கேட்டேன். அரசுரிமைக்கு வாரிசாக அண்ணன் இருந்தபோது, இளையவன் அரியணை ஏறுகிறான். ஆட்சி சரியில்லாமல் இருக்கவே, மக்கள் ஆதரவு பெற்ற மூத்த இளவரசனான அண்ணன் அரசனாயிருக்கின்ற தம்பியோடு போரிடுகிறான். அண்ணனிடம் சரணடைய விரும்பாத தம்பி போரில் தன்னையே மாய்த்து கொள்கிறான். அளவுக்கு அதிகமாக ஆசைப்படுபவர்கள் இழப்புகளையும், அளவோடு ஆசைப்படுபவன் வளங்களையும் பெறுவார்கள் என்பதை இக்கதை உணர்த்தியது. கலை: இலங்கை காத்தான் குடியிலிருந்து க.மு.பா.றிகாஸ் அனுப்பிய கடிதம். தமிழ்ப் பிரிவிலிருந்து அனுப்பிய பெய்ஜிங் ரிவீவ் மற்றும் சீன தமிழொலி ஆகியவை கிடைத்தன. சீனா மற்றும் ஏனைய நாடுகளின் அதிகமாக தகவல்களை இவற்றின் மூலம் அறிந்து கொண்டேன். எனது பொது அறிவையும், உலக நடப்புகளையும் அறிந்துகொள்ள அதிகமாக உதவுவதால் இந்த இதழ்களை தொடந்து அனுப்ப வேண்டுகிறேன். தமிழன்பன்: தொடர்வது, முணுகப்பட்டு பி கண்ணன் சேகர் செய்திகள் பற்றி எழுதிய கடிதம். சீனாவின் ஏரிகளிலுள்ள நீரின் மூலம் மின் உற்பத்தியை அதிகரிக்க சீன அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை அறிந்தேன். சூரிய ஆற்றல், நீர் மின்னாற்றல் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த மின்சார உற்பத்தி நடவடிக்கைள் சீன மின்வாரியத்துறையை தன்னிறைவை நோக்கி வழிநடத்தும் என்று கருதுகிறேன். மேலும் சீனாவின் நிதி ஒதுக்கீட்டு திட்ங்களால் திபெத் தன்னாட்சி பிரதேச விவசாயி மற்றும் ஆயர்கள் பல வகையில் முன்னேற்றம் கண்டு வருவது ஆக்கபூர்வமானது. சொந்த வீடுகளில் வாழ்வோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருவதை செய்திகள் மூலம் தெரிந்து கொண்டேன். கலை: அடுத்தாக மணமேடு எம்.தேவராஜா எழுதிய கடிதம். செய்தி தொகுப்பு நிகழ்ச்சியில் அமைதி திரும்புமா? என்ற தலைப்பில் முனைவர் ந.கடிகாசலம் வழங்கிய ஆய்வினை கேட்டேன். ஈழத் தமிழர்களின் வரலாற்றையும், அவர்கள் இன ரீதியாக ஒதுக்கப்பட்டதையும் அறியமுடிந்தது. இன அடிப்படையிலான பாரபட்சமான நிலை அகன்று நியமான உரிமைகள் வழங்கப்படும் போது தான் உண்மையான அமைதி திரும்பும் என்று கருதுகிறேன்.
தமிழன்பன்: தொடர்வது பெ சந்திசேகரன் சீன சமூக வாழ்வு குறித்து எமுதிய கடிதம். ஜென்தோங் நகரில் உள்ள குடியிருப்பு மருத்துவ சேவை மையம் ஆற்றுகின்ற அரிய சேவைகளை இந்நிகழ்சியின் மூலம் அறிந்தேன். வீட்டு வாசலில் மருத்துவ சேவை புரியும் இத்தகைய குடியிருப்பு மருத்துவ சிகிச்சை மைய முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். கலை: புதுக்கோட்டை ஜெயஸ்ரீ வரதராசன் எழுதிய கடிதம். அறிவியல் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி கேட்டேன். சீனர்களின் உணவு முறை பற்றி வாணி அழகாக எடுத்து கூறினார்கள். மக்கள் உண்கின்ற உணவு நல்ல பயன்தரும் வகையில் 10 முன்மொழிவுகளை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்த போவதை அறிந்தேன். நலமான சூழலை ஏற்படுத்த சுகாதாரதுறை நகர மக்களின் உணவு நிலை பற்றியும், அவர்களை அச்சுறுத்தும் முக்கிய பிரச்சனைகளையும் களைய எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை அறிந்து பெருமைப்படுகிறேன். தமிழன்பன்: தொடர்வது மெட்டாலா பாஸ்கர் எழுதிய கடிதம். சீன மகளிர் நிகழ்ச்சியில் தசை பிடிப்பகம் நடத்தி வரும் அம்மையாரின் செயல்பாடுகளை பற்றி அறிந்து கொண்டேன். பார்வையற்ற இந்த அம்மையார் தசை பிடிப்பகம் நடத்தி தனது செந்தக்காலில் நிற்கும் முயற்சி பாராட்டப்பட வேண்டும். விளையாட்டில் தங்கப்பதக்கம் பெற்ற பின்னர் அரசின் உதவி தொகையால் வாழ்க்கை நடத்தாமல் தனது முயற்சியால் வெற்றியடைந்துள்ளது போற்றுதற்குரியது.
1 2
|