• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-07 10:30:00    
நேயர்களின் கருத்துக்கள்

cri

அடுத்ததாக மின்னஞ்சல் பகுதி
வளவனூர் புதுப்பாளையம், எஸ்.செல்வம்
மார்ச் திங்கள் 28 ஆம் நாள் இடம்பெற்ற கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியைக் கேட்டேன். இன்றைய திபெத் என்னும் கண்காட்சியைக் கண்டபின், ஆய்வாளர் அன்சாங்தன் அவர்களை கிளிட்டஸ் அவர்கள் பேட்டி கண்டதன் தொடர்ச்சி இன்று இடம்பெற்றது. மதத்தின் பேரில், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையின் நலன்களெல்லாம் எவ்வாறு சுரண்டப்பட்டன என்பதை அறியும்போது நெஞ்சம் கனத்தது. உண்மையான தொழில்துறை அமைப்பு ஏதும் உருவாத இடத்தில் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. மதப்பிரிவினர், தம் பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏதும் ஏற்படாமல் கவனமாக இருந்ததையும் புரிந்து கொள்ள முடிகிறது. கிட்டத்தட்ட ஆதிவாசிகளைப்போலத்தான் அக்கால திபெத்தின் ஆயர்களும் விவசாயிகளும் வாழ்ந்துள்ளனர். ஜனநாயக சீர்திருத்தத்தின் மூலம், அவர்களின் வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்றி வைத்து சீன நடுவண் அரசுக்கு என் அன்பான பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
விஜயமங்கலம், குணசீலன்
ஒரு காலத்தில் கடிதங்களையே நம்பி இருந்தோம். ஆனால் இன்று நிலைமையே வேறு. இனைய வசதி இல்லாதவர்கள் மிக குறைவு என்று சொல்லும் அளவிற்கு இனைய பயன்பாடு புகுந்துவிட்டது. சிறியது முதல் பெரிய வணிகம் வரை இணைய வசதியை பயன்படுத்தி நடத்த வேண்டிய நிலை உருவாகிவிட்டது. ஆணோ பெண்ணோ துணை இல்லாமல் கூட வாழ்ந்து விடலாம். ஆனால் இணையம் இல்லாமல் வாழ முடியுமா என்று கேள்விகேட்கும் அளவுக்கு வந்துவிட்டோம் என்பதை அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் தந்த சீன வானொலிக்கு நன்றி.
விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன்
நமது சிறப்பு மிகு நேயர்களாகிய வளவனுர் புதுப்பாளையம் எஸ்.செல்வம் அவர்களும் புதுச்சேரி என்.பாலக்குமார் அவர்களும் இணைந்து செல்லிடபேசி சேவை மூலம் சீனா பற்றிய தகவல்களை அளித்து வருகின்றனர். சீன வானொலியில் கேட்காத, பல்வேறு இதழ்களில் வெளிவராத செய்திகள் அவை. என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது போல் சீன தகவல்கள் அளிப்பதே எங்கள் பணி என்று செயல்பட்டு வரும் செல்வம், பாலக்குமார் இருவருக்கும் எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் பணி தொடரட்டும். அது வரலாற்று சாதனையாகட்டும். வாழ்த்துக்கள்.


ஊத்தங்கரை, கவி.செங்குட்டுவன்
திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் திபெத் மரபுவழி புத்தமதத் துறவிகள் பல ஆண்டுகாளாக கோயில்களில் மத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மத நம்பிக்கையை பரவல் செய்து திபெத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு உள்ளிட்ட துறைகளில், முக்கிய பங்காற்றினர். 1959 - ம் ஆண்டு, திபெத்தில் அரசியலும் மதமும் ஒன்றிணைந்திருந்த அமைப்புமுறை ஒழிக்கப்பட்ட பின், திபெத் மக்களின் வாழ்க்கையில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டதை செய்தி தொகுப்பு மூலம் அறிந்தேன்.
……மதுரை-20 ஆர்.அமுதாராணி……
மூமலை பள்ளதாக்கு அருங்காட்சியகம் பற்றி சீன தமிழ் ஒலிப்பரப்பு மூலம் தெரிந்து கொண்டேன். 2006ல் கட்டிமுடிக்கப்பட்ட இந்த அருஞ்காட்சியகம் வரலாற்று பண்பாட்டையும் மனிதகுல நாகரிகத்தையும் வெளிஉலகத்திற்கு எடுத்துகாட்டுவதாக அமைந்துள்ளது. யாங்சி ஆற்றின் மூமலை பள்ளதாக்கு இயற்கைக் காட்சிகள், திட்டபணிகள், இப்பிரதேசத்தின் பண்டைக்கால வரலாறு மற்றும் வளர்ச்சியை அறிந்து கொள்ள உதவும். அவற்றின் மூலம் மனிதகுலத்திற்கும் இயற்கை காட்சிக்கும் இடையிலான சிறப்பான உறவையும் அறியலாம்.
செல்லூர், நா.சீனிவாசன்
அமெரிக்க‌ டால‌ருக்கு நிக‌ரான‌ புதிய‌ ரூபாய் நோட்டுக்க‌ளை வெளியிட‌ வேண்டும் என்று சீனா க‌ருத்து தெரிவித்துள்ள‌தையும், அதை ஆத‌ரித்து க‌ருத்துக்க‌ளை வெளியிட்டுள்ள‌ உல‌க‌ வ‌ங்கியின் துணைத்த‌லைவ‌ரின், க‌ருத்துக்க‌ளையும் வ‌ர‌வேற்கின்றோம். சீனாவின் ஆலோச‌னைப்ப‌டி புதிய‌ ரூபாய் நோட்டுக்க‌ள் புழ‌க்க‌த்திற்க்கு வ‌ரும்போதுதான் அமெரிக்காவின் உண்மையான‌ பொருளாதார‌ நிலை அனைவரும் தெளிவாகும்.


1 2