• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-08 14:52:25    
வெள்ளத்தை கட்டுப்படுத்திய வேந்தன்

cri

பண்டைய சீனாவில், வெள்ளம் ஒரு நீங்காத பேரழிவாக இருந்தது. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன், ஷுன்னின் ஆட்சிக்காலத்தில் தோன்றியவர்தான் மாவீரன் யு. வெள்ளத்தை வென்ற வீரன் யுவின் தந்தை குன் ஷுன் மன்னனின் கட்டளைக்கிணங்க 9 ஆண்டுகாலம் வெள்ளத்தை கட்டுப்படுத்தி மக்களுக்கு உதவ முயன்றும் தோல்வியையே சந்திக்க நேர்ந்தது. இந்த தோல்வியை மன்னன் ஷுன் ஏற்கவில்லை. யுவின் தந்தை குன்னுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தந்தையை தொடர்ந்து மகனான யுவும், தந்தையின் பாதையில் வெள்ளத்தை கட்டுப்படுத்தி, மக்களுக்கு நன்மை புரியும் சவால் நிறைந்த பணியில் ஈடுபட்டான். வெள்ளத்தை கட்டுப்படுத்தி, வென்றடக்கி மக்களுக்கு உதவும் நோக்கில் தன் நேரத்தையெல்லாம் செலவிட்ட யு, 30 வயது கடந்தும் திருமணம் செய்யாமல் இருந்தார். ஒருமுறை துஷான் என்ர இடத்தில் துஷான் ஷிவின் மகள் நியுஜியாவை சந்தித்தான் யு. கண்டதும் இருவரும் காதல் வயப்பட்டனர். இடையில் கடமை அழைக்கவே யு புறப்பட்டு வெள்ளக் கட்டுப்பாட்டு பணிக்காக தூஷானை விட்டு சென்றான். காதலன் யுவை பிரிந்த சோகம், காதலின் தீவிரத்திலான பசலை என வாடிய நியுஜியாவ் காதலன் யுவை விட்டு விலகியிருக்கும் சோகத்தை ஒரு பாடலாக இயற்றினாள். இது பற்றி தூஷான் திரும்பிய யு நியுஜியாவின் தோழி சொல்லக்கேட்டு, நெகிழ்ந்துபோனான். பின்னர் யுவும் நியுஜியாவும் தைஷாங் எனுமிடத்தில் திருமணம் செய்துகொண்டனர்.
மணமுடித்த நான்கே நாட்களில், கடமைவீரனாம் யு, வெள்ளத் தடுப்பில் ஈடுபட பிரியாவிடை பெற்று சென்றான். அடுத்த 13 ஆண்டுகாலம் அவன் தனது வீடு வழியாக மூன்றே முறைதான் கடந்து சென்றான். இருப்பினும் அந்த மூன்று சமயங்களிலும் தன் மனைவியையோ குடும்பத்தினரையோ அவன் சந்திக்கவில்லை. அந்த மூன்று முறையும் அவன் மறைந்திருந்தோ, கொஞ்சம் தொலைவிலிருந்தோ தன் குடும்பத்தினரை பார்த்ததோடு சரி, வீட்டில் நுழையக்கூடவில்லை. அந்த மூன்று முறையும் அவன் பார்த்தது, கேட்டது என்ன? அவனது பிரிவை குடும்பத்தினர் எப்படி சமாளித்தனர்? கதையை தொடர்ந்து கேட்போம்.
திருமணம் முடித்து நான்காவது நாள் வீட்டை விட்டு புறப்பட்ட யு, முதன்முறையாக தன் வீடு வழியாக கடந்தது, நான்கு ஆண்டுகள் கழிந்த பின்னரே. ஆக, முதன் முறை யு அவனது வீட்டினருகே சென்றபோது, அவனது தாயாரின் எரிச்சலான குரல் கேட்டது. "அப்பன் வெள்ளத்தை கட்டுப்படுத்தச் சென்று யுஷானின் கொல்லப்பட்டான். மகனோ தந்தையை போலவே வெள்ளத்தை கட்டுப்படுத்தச் சென்று நான்கு ஆண்டுகளோடிப்போயிற்று. அப்பன் ஒரு மூடன், மகனோ மடையன்" என்று தன் தாயார் கூறுவதை கேட்டு அதிர்ச்சியுற்றான் யு. அப்போது ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே யுவின் தாய் குழந்தையை கோபத்தோடு "அழுவதை எப்போதுதான் நிறுத்துவாய்? அழவேண்டுமென்றால் போய் உன் அப்பனிடம் அழு. அது உன் பாட்டிக்கு தொல்லையில்லாமல் செய்யும்" என்று கடிந்துகொண்டாள். அப்போது யுவின் மனைவி நியுஜியாவின் குழந்தையை அமைதிப்படுத்தி தாலாட்டும் குரல் கேட்டது. யுவின் தாய் விட்டபாடில்லை, "கட்டிய கணவன் திருமணம் முடித்த நான்கே நாளில் விட்டுச்சென்றான். நான்கு ஆண்டுகள் கடந்து வீடு திரும்பவில்லை. மனைவி பெயருக்கத்தான் மணமகள், உண்மையில் அவளது நிலை விதவைக்கு சமம்" என்று கூற நியுஜியாவும் ஆழ்ந்த பெருமூச்சு விட்டு தன் துயரை வெளிப்படுத்தினாள். இதையெல்லாம் செவிகொடுத்த யுவுக்கு வீட்டிற்குள் நுழைய மனம் ஒப்பவில்லை. சோகத்தின் வெளிப்பாடாய் எரிச்சலில் பேசும் தன் தாயிடம் என்ன சொல்லி ஆறுதல் தருவது? மேலும் செய்யவேண்டிய கடமை இன்னும் முற்றுபெறாத நிலையில், நேரத்தை வீணடிக்கவேண்டாமே என்றெண்ணி, வீட்டிற்குள் நுழையாமலேயே அங்கிருந்து விலகினான் யு.

1 2