• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-08 14:52:25    
வெள்ளத்தை கட்டுப்படுத்திய வேந்தன்

cri

ஏறக்குறைய மூன்றாண்டுகள் உருண்டோடின. மீண்டும் தன் சொந்த ஊரின் வழியே செல்ல நேரிட்டபோது, வீட்டிற்கு செல்லலாம் என்றெண்ணி புறப்பட்டான் யு. வீட்டை, குடும்பத்தை பிரிந்த சோகம் அவனுக்கும் இல்லாமலில்லை. எனவே விடியலுக்கு முன் குதிரையிலேறி புறப்பட்டு நண்பகல் வாக்கில் வீட்டிற்கு அருகே நெருங்கிய யு, வீட்டின் சமையலறையிலிருந்து புகை வெளியேறுவதையும், அடைக்கப்பட்டிருந்த பன்றிகளில் குரலையும் கேட்டு, எல்லாம் இயல்பாகத்தான் இருக்கிறது என்றெண்ணி வீட்டினருகே சென்றான். அப்போது வீட்டிலிருந்து தன் தாயின் சிரிப்பொலி கேட்டதை கவனித்த யு, தயங்கி நின்று, என்ன நடக்கிறது என்று கேட்போம் என்று காத்திருந்தான். அவனது தாய் தன் பேரனிடம், "பேராண்டி, உன் அப்பா வீட்டுக்கு வந்து உன்னை யார் என்று தெரியாமல் விழித்தால் என்னடா செய்வாய்" என்று கேட்டாள். அதற்கு அந்த பேரன், என்னை அடையாளம் காணாவிட்டால், ஓங்கி ஒரு அடி கொடுப்பேன் என்றான். உடனே அவனது தாயும் யுவின் மனைவியுமான நியுஜியாவ் ஏனடா அப்படி செய்வாய் என்று கேட்க, தன் சொந்த மகனையே அடையாளம் காணமுடியாவிட்டால், அடி வாங்குவதில் தவறில்லை என்றான் அந்தச் சிறுவன்.
உடனே யுவின் தாய், பலே, சரியாக சொன்னாய் பேராண்டி. நீ உன் பாட்டியை போலவே குணமுடையவன் என்று கூறி சிரித்தாள்.
இதையெல்லாம் வீட்டிற்கு வெளியே இருந்தபடி கேட்ட, யு, கடந்த முறை வந்தபோது, சோகமும் புலம்பலுமாயிருந்தது. அப்போதே வீட்டிற்கு எல்லவ்ல்லை, இப்போது மகிழ்ச்சியும், சிரிப்பொலியுமாக குடும்பம் இருக்க நான் உள்ளே செல்ல அவசியமில்லை என்றெண்ணி, வெள்ளத்தை அடக்கும் மக்கள் பணியை செய்ய புறப்பட்டான்.
அதற்கு பின் ஒரு மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் உருண்டோடின. இம்முறையும் தன் ஊர் வழியே செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது, வீட்டிற்கு செல்ல புறப்பட்டான் யு. ஊருக்கு அருகே ஓரிடத்தில் தங்கினான் யு. அப்போது கருமேகம் சூழ்ந்து, பெருமழை பெய்தது. மோசாமான வானிலையை பொருட்படுத்தாது வீட்டிற்கு செல்ல குதிரையிலேறி புறப்பட்டான் யு. மாலை வேளை வீட்டினருகே வந்தபோது, உள்ளே சென்று அழுக்கான ஆடைகளை நீக்கி புத்தாடை உடுத்தி, குடும்பத்தினரோடு சுவையான உணவுண்டு, அலவளாவி மகிழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தோடு வீட்டின் வாயிலருகே வந்தபோது, ஒரு சிறுவன் வெளியே வீட்டின் கூரையிலிருந்து வடிந்த நீரை கால்வாய் வெட்டி அகற்றுவதை கண்டான். யுவை கண்டதும் அச்சிறுவன், வணக்கம் மாமா, நீங்கள் என் அப்பாவை பார்த்தீர்களா என்று கேட்டான். யு அவனிடன் யாரப்பா உன் தந்தை என்று கேட்க, அச்சிறுவன், மாவீரர் யுதான் என் அப்பா. அவரை நீங்கள் பார்த்தால் சீக்கிரம் வந்து,இங்கே கால்வாய் வெட்டி, குழி செய்ய எனக்கு உதவ வீட்டுக்கு வரச் சொல்லுங்கள் என்றான். அதேநேரம் வீட்டுக்குள்ளிருந்து யுவின் தாயின் குரல் கேட்டது. அடேய் குட்டிப்பிசாசு, முட்டாள்தனமாய் பேசாதே. நாட்டில் ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்தி அடக்கி மக்களுக்கு நன்மை செய்யும் பணியை செய்பவன் உன் தந்தை. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அதில் வெற்றி பெற்று வருகிறான் அதற்குள் அவன் வீட்டுக்கு வந்து உனக்கு கால்வாய் வெட்ட உதவச்சொல்கிறாயா என்றால் யுவின் தாய். யுவின் மனைவி நியுஜியாவும் மகனிடம். உன் பாட்டி சொல்வது சரிதான். விண்ணுலகத்துக்கீழான எல்லா வெள்ளங்களையும் கட்டுப்படுத்தி, வெல்லும் வரை உன் தந்தை வீடு திரும்பமாட்டார் என்றாள்.
தன் குடும்பத்தினர் தன்னை நன்றாக புரிந்துகொண்டுள்ளதை அறிந்த மகிழ்ச்சியில், தன் மகனாகிய அந்த சிறுவனிடன், "சரி உன் தந்தையை நான் பார்த்தால், நிச்சயம் நீ சொன்னதை அவரிடம் சொல்வேன்" என்று உறுதி கூறி வீட்டிற்குள் நுழையாமல் மகிழ்ச்சியோடு தன் பணியை தொடர புறப்பட்டான் யு. ஆக நாட்டின் வெள்ள பேரழிவை முழுவதுமாக கட்டுப்பாட்டில் வைத்து மக்களுக்கு பாதுக்காப்பு வழங்க யுவுக்கு 13 ஆண்டுகாலம் தேவைப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களின் மக்கள் மீண்டும் வீடுகளை கட்டு குடியேறினர். யுவின் அயராத, தன்னலமற்ற சேவையால் நாடே மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. ஒருவழியாக தன் கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் வீடு திரும்பினான் யு. வீடு திரும்பியபோது அவனது மகன் பதின்வயது சிறுவனாக இருந்தான், காதல் மனைவி நியுஜியாவ் நடுத்தர வயதினளாய் இருந்தாள்.
பின்னாளில் அவனது அருஞ்செயல், அயரா உழைப்பால் மக்கள் அவனை பெரிதும் போற்றினர். ஷுன் மன்னனுக்கு அடுத்ததாய் மக்கள் விரும்பிய தலைவனாக நாட்டின் மன்னனாக முடிசூட்டப்பட்டான் யு. அவனது மனைவி நியுஜியாவ் ராணியானாள்.


1 2