• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-10 11:07:39    
Da Lian நகரைச் சேர்ந்த ஒரு மங்கையின் கனவு

cri
2008ஆம் ஆண்டின் நவம்பர் திங்கள் 26ஆம் நாள் பிற்பகல், புதிய குரல் என்ற Da Lian நகர வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் தேர்வு நடவடிக்கையின் இறுதிப்போட்டி சுறுசுறுப்பாக நடைபெற்றது. நாடு முழுவதிலுமிருந்து வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு, Da Lian வானொலி நிலையம் இந்நடவடிக்கையை மேற்கொண்டது. மொத்தம் 726 பேர் இதில் கலந்து கொண்டனர். 40 நாட்கள் நீடித்த தீவிர போட்டிகள் மூலம், Da Lian நகரைச் சேர்ந்த Guo Xue என்னும் அழகான மங்கை, தேர்வு செய்யப்பட்டார்.

Guo Xue, Da Lian அறிவியல் மற்றும் பொறியியல் பல்கலைக்கழகத்தின் நான்காமாண்டு மாணவியாவார். வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்தியியல் துறையில் அவர் கல்வி பயில்கின்றார். சிறு வயதிலிருந்தே நிகழ்ச்சிகளைத் தொகுப்பதில் அவர் பேரார்வம் கொண்டுள்ளார். இடைநிலைப்பள்ளியில் கல்வி பயின்றது முதல் இது வரை, அவர் பள்ளி மற்றும் பல்கலைக்கழக வானொலி நிலையங்களின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து வருகிறார். அவர் கூறியதாவது:
"அறிவிப்பாளர் மற்றும் தொகுப்பாளராக, வேலை செய்யும் போது எனக்கு சொந்தமான நிகழ்ச்சியைத் தொகுக்க முடியும். குறிப்பாக, மக்களுக்கிடை பரஸ்பர ஆதரவு மற்றும் பரிமாற்றம் அருமையானவை, அற்புதமானவை. ஒலிபரப்பு மூலம், எனது குரல் மற்றும் கருத்துகளை விரும்புவோரை கண்டறிய முடியும். நாள்தோறும் அவர்களுடன் தொடர்பு கொள்வது, பயன் உள்ளது" என்று Guo Xue கூறினார்.
பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பின், தமது கனவை நனவாக்கும் பாதையில், Guo Xue காலடி எடுத்து வைத்தார். பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு கல்வி பயின்ற போது, இப்பல்கலைக்கழகத்தின் வானொலி நிலையத்தில், செய்தியாளர், பதிப்பாசிரியர் மற்றும் அறிவிப்பாளர் என்ற பொறுப்புகளை ஏற்ற ஒரே ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக அவர் வேலை செய்தார். 2006ஆம் ஆண்டு, சீனாவின் பத்து பல்கலைக்கழகங்களின் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் போட்டியில் அவர் நான்காவது இடம் பெற்றார். கடந்த ஆண்டு கோடைக்காலம், "நாட்டின் ஒலிம்பிக் வானொலி ஒன்றியத்தில்" சேர்ந்து, சீன மத்திய வானொலி நிலையத்தின் தொழில் முறை தொகுப்பாளர்களுடன் இணைந்து, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை அறிவிக்கும் பணியில் ஈடுபட்டார்.
1 2