• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Thursday    Apr 10th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-10 11:07:39    
Da Lian நகரைச் சேர்ந்த ஒரு மங்கையின் கனவு

cri

பெய்சிங் ஒலி்ம்பிக் விளையாட்டு போட்டிகள் பற்றி அறிவித்தது, Guo Xue, தமது கனவை நனவாக்கும் போக்கில் ஒரு பகுதியாகும். ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள், ஒரு பெரிய அரங்கு போல் இருக்கின்றன. பல்வேறு நாடுகளின் வீரர்கள், உலகளவிலான மக்களால் கண்டு ரசிக்கப்பட்டனர். இயல்பாகவே இந்த அரங்கு Guo Xueக்கும் உரியது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மீதான தமது பேரார்வத்தையும், கனவை நனவாக்க தாம் மேற்கொண்டுள்ள முயற்சிகளையும் சீன நேயர்களுக்கு Guo Xue வெளிப்படுத்தினார். இதற்கிடையில், ஒலிம்பிக் தந்துள்ள மதிப்பை பகிர்ந்து கொண்டதும், ஒலிம்பிக் உற்சாகத்தை உணர்ந்து கொண்டதும், Guo Xueஐப் பொறுத்த வரை, மாபெரும் செல்வமாகும். அவர் கூறியதாவது:

"ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், சீன மக்களின் ஒற்றுமையை உணர்ந்து கொண்டேன். பணியில், மத்திய வானொலி நிலையம், பல உள்ளூர் வானொலி நிலையங்கள் ஆகியவற்றின் தொகுப்பாளர்களிடமிருந்து கற்றுக் கொண்ட சிறப்பு தொழில் திறமையும், கடமை பற்றிய கருத்துக்களும், எனது வாழ் நாளில் மறக்கப்பட முடியாத செல்வமாகும். இந்த காலத்தில் வாழ்வது, எனது அதிர்ஷ்டம் என்று கருதுகின்றேன். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரங்கு மற்றும் வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன" என்று நெகிழ்ச்சியோடு Guo Xue குறிப்பிட்டார்.
2008ஆம் ஆண்டு, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பற்றி அறிவித்த அனுபவம், Guo Xueவுக்கு மாபெரும் ஊக்கத்தை தந்துள்ளது. நிகழ்ச்சித் தொகுப்பாளராக மாறும் கனவை நிறைவேற்றும் பாதையில் அவர் மேலதிக நம்பிக்கை கொண்டு, மேலும் வலுவான காலடியை பதித்தார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்த பின், அவர் சீன மத்திய வானொலி நிலையத்தில் தொடர்ந்து பயிற்சி செய்தார். Da Lian வானொலி நிலையம் நடத்திய நிகழ்ச்சித் தொகுப்பாளர்களின் தேர்வு போட்டி பற்றி அறிந்த பின் அவர் அதில் கலந்து கொள்ள பதிவு செய்தார்.

"Da Lian வானொலி நிலையம் நடத்திய போட்டியில் கலந்து கொள்வது, எனனைப் பொறுத்த வரை, ஓர் அறைகூவல் ஆகும்." என்றார், அவர்.
தமக்கு ஏற்படும் அறை கூவலை துணிந்து ஏற்றுக்கொண்டால்தான், படிப்படியாக முன்னேற முடியும். சளையாத முயற்சிகள் மூலம், தற்போது Guo Xue, Da Lian வானொலி நிலையத்தின் பயிற்சி தொகுப்பாளராக மாறியுள்ளார். அவர் கூறியதாவது:
"எதிர்காலத்தில், எனது நிகழ்ச்சி மூலம் மேலதிக மக்களுக்கு ஊக்கமும், நம்பிக்கை ஆர்வமும் கொண்ட மனப்பான்மையை ஊட்ட விரும்புகின்றேன். அவர்கள் கனவை நாடுவதில் உறுதி பூண்டு, வாழ்க்கைப் பாதையில் மேலும் அருமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்"என்றார் Guo Xue.
1 2
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040