• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-14 10:04:25    
நேயர்களின் கருத்துக்கள்

cri

தமிழன்பன் நீங்கள் அனுப்பும் கடிதங்கள் சீன வானொலியில் உங்களின் மேலான பங்களிப்பை எடுத்துரைக்கும் கருவிகள். வானொலி நிகழ்ச்சிகள் பற்றி எமக்கு தொடர்ந்து எழுதுங்கள்.
கலை ஏப்ரல் 15 ஆம் நாள் தொடங்கும் அருமையான திபெத் என்ற இணையதள பொது அறிவுப் போட்டியில் அனைவரும் கலந்துகொண்டு வெற்றிபெற முன்கூட்டியே வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.
தமிழன்பன் இன்றைய நிகழ்சியின் முதலில் கடிதப்பகுதி
கலை முதலாவதாக திருவாணைக்காவல் ஜி. சக்ரபாணி சீன தேசிய இன குடும்பம் பற்றி எழுதிய கடிதம். திபெத் மருத்துவம் பற்றியும், அதன் சிகிச்சை முறை பற்றியும் நிகழ்ச்சி அமைந்திருந்தது. 18 ஆண்டுகள் ஆய்வுப்பணி நடைபெறுவதையும், சீன நடுவண் அரசு இவ்வாய்வு திட்டப்பணிக்கு நிதி ஒதுக்கியுள்ளதையும் அறிந்துகொண்டேன். 300 மாணவர்கள் திபெத் பாரம்பரிய மருத்துவத்தை கற்றுக்கொண்டிருப்பது, சீன தலைநகரான பெய்ஜிங்கில் திபெத்திய மருத்துவமனைகள் நிறுவப்படுவது, திபெத் மருந்துகள் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வருவது ஆகியவை திபெத் மருத்துவம் மேம்பட்டு வளர்வதற்கு எதிர்கால வாய்ப்புகள் அதிகமாவதை காட்டுகிறது.
தமிழன்பன் சென்னை மறைமலைநகர் மல்லிகாதேவி சீன உணவரங்கம் பற்றி எழுதிய கடிதம். கோழி இறைச்சி, மஞ்சள், பூசணிக்காய் என அருமையான கலவையில் சமைத்து சுவைக்க வாணியும் கிளீட்டஸூம் சொல்லிக் கொடுத்தார்கள். இனிப்பான விருந்து. மேலும் வெங்காயத்தை நறுக்கும்போது கண்ணிலிருந்து நீர் வராமலிருக்க கொடுத்த குறிப்பு பலருக்கு உதவும். அதுபோல இன்னொரு நிகழ்ச்சியில் இடம்பெற்ற எண்ணெய் இல்லாத சமையல் செய்து பார்க்க ஆசை தான். ஆனால் பொருட்கள் கிடைக்கவி்ல்லை.


கலை அடு்த்தாக இலங்கை கினிகத்தேனை எஸ்.வி. துரைராஜா எழுதிய கடிதம். அறிவியல் உலகம் நிகழ்சியில், தலைமுடியை பேணுவது பற்றி அறிந்து கொண்டேன். எப்போதும் ஷாம்பூ தேய்த்து குளிப்பது, தலைமுடிக்கு வண்ணம் அடிப்பது தற்காலிக அழகு தான். ஆனால் அவை தலைமுடிக்கு மட்டுமல்ல, தலைக்கே கேடு விளைவிக்கிறது என்பதை இந்நிகழ்ச்சி புரிய வைத்தது.
தமிழன்பன் மீனாட்சிபாளையம் கா.அருண் எழுதிய கடிதம். சீன திருமணங்களில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்களை சீனப்பண்பாடு நிகழ்ச்சி அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் இந்திய மற்றும் சீன திருமண முறைகளை ஒப்பிட்டு பார்க்க முடிந்தது. நுகர்வு பண்பாட்டில் வளர்ந்துவரும் நவீனக்காலம் இளம் தம்பதியர் பொருளாதார ரீதியில் பெற்றோரை சார்ந்து வாழச் செய்வதையும் இந்நிகழ்ச்சி விளக்கியது.
கலை நீலகிரிகீழ்குந்தா போஜன் எழுதிய கடிதம். முன்பின் அறியாத விளையாட்டு வீரருக்கு குடும்ப பொறுப்பை சுமக்கும் இளம் பெண்ணொருவர், தனது சிறுநீரகத்தை கொடையாக கொடுத்ததை சீன மகளிர் நிகழ்ச்சியில் விவரித்தபோது மனமுருகி போனேன். அந்த இளம்பெண் வாழ்வாங்கு வாழ எனது வாழ்த்துக்கள். இரத்தத்தை கொடையாக வழங்குவது சிறந்தது தான். ஆனால் உடல் உறுப்புகளை கொடையாக கொடுப்பது அதைவிட ஒருபடி உயர்ந்தது. உயிரை வாழவைக்கும் இத்தகைய கொடை முயற்சிகளை ஊக்குவித்தல் அவசியம்.


தமிழன்பன் அறிவியல் கல்வி நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றி ஜெயங்கொண்டம் கி. இரவிசந்திரன் எழுதிய கடிதம். சந்திர ஆய்வு வாகனம் பற்றிய தகவல்களை கேட்டேன். பொன் வண்ணமுடைய 120 கிலோகிராம் எடையுடன் இந்த வாகனத்தை சீனா தயாரித்துள்ளது. சந்திரனின் தரைபரப்பில் ஓடச்செய்து ஆய்வுகளை மேற்கொள்ள உதவுமாறு இந்த ஆய்வு வாகனத்தை வடிவமைப்பதற்கு சீனா சில ஆண்டுகளாக முயற்சித்து வந்தது இந்நிகழ்ச்சி மூலம் தெரியவந்தது. மேலும் சந்திரனின் ஈர்ப்பு ஆற்றல் புவியின் ஈர்ப்பு ஆற்றலை விட ஒரு மடங்கு அதிகமானது என்பதையும் அன்றைய நிகழ்ச்சியில் தெரிந்து கொண்டேன்.
கலை மதுரை அண்ணாநகர் என் இராமசாமி எழுதிய கடிதம். சீன அமெரிக்க உத்திநோக்கு பொருளாதார பேச்சுவார்த்தையில் பயனுள்ள முன்னேற்றங்கள் ஏற்பட்டதை அறிந்தேன். ஐந்தாவது சீன அமெரிக்க உத்திநோக்கு பொருளாதாரா பேச்சுவார்த்தை அமெரிக்காவின் அரசு அதிகாரம் புதிய அரசிடம் ஒப்படைப்பதற்கு முன்பு பெய்ஜிங்கில் நடைபெற்றுள்ள மிக முக்கியமான முயற்சியாகும். இதனால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, இருதரப்பு வளர்ச்சி ஆகியவை நிச்சயம் விரிவடையும். இரு நாடுகளும் வளர்ச்சியின் நலன்களை பெறும்.
தமிழன்பன் இலங்கை மட்டகளப்பிலிருந்து ச. சச்சுகாந் அனுப்பிய கடிதம். சீன வானொலியிலிருந்து கிடைத்த இதழ்கள் அனைத்தும் சீன வானொலி மற்றும் சீனா பற்றி அதிகம் அறிந்து கொள்ள பயன்பட்டன. நாட்டால் வேறுபட்டாலும் மொழியின் உறவோடு பின்னிபிணைந்து வானொலி மூலம் செந்தமிழில் உரையாடும் சீன மக்களுக்கு எமது நன்றிகள். சீன வானொலி நிகழ்ச்சிகளை கேட்கும்போது இலங்கையில் வாழ்ந்தாலும் சீனாவில் வாழ்வது போன்ற உணர்வு எற்படுகிறது.
கலை அடுத்தாக நட்பு பாலம் நிகழ்ச்சி பற்றி தாசப்பகவுண்டன் புதூர் எஸ் சுதர்ஷன் அனுப்பிய கடிதம். ஷியான் நகரம், பெய்ஜிங்கிற்கு அடுத்தப்படியாக முன்னேற்றம் அடைந்த நகரம் என்பதையும், ஆசியாவிலே மிக சிறந்த விளையாட்டு அரங்கு ஷியானில் உள்ளது என்றும் தெரிந்து கொண்டேன். அங்கு நடைபெற்ற நடன நிகழ்ச்சி வேறு எங்கும் காணமுடியாத அளவுக்கு அருமையாக இருந்தது என்பதை பெய்ஜிங்கில் பயணம் மேற்கொண்ட பல்லவி கே. பரமசிவன், பி. ஏ. நாச்சிமுத்து ஆகியோர் விளக்கினர். இது சீனாவில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் ஆர்வத்தை தூண்டியது.

1 2