• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-14 10:04:25    
நேயர்களின் கருத்துக்கள்

cri

தமிழன்பன் மணச்சநல்லூர் ந. சண்முகம் எழுதிய கடிதம். தமிழ் மூலம் சீனம் வழியாக சீன மொழியை தமிழில் கற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்பை சீன வானொலி எங்களுக்கு அளித்திருக்கிறது. அது மட்டுமல்ல பல ஆங்கில சொற்களுக்கு செந்தமிழ் சொற்களை பயன்படுத்தும் சீன வானொலியை கேட்பது அனிமையாக உள்ளது. அதனை சிறப்புடன் செயல்படுத்தும் தமிழ்ப்பிரிவின் தலைவி கலையரசி அவர்களுக்கும் சீன தமிழ் குடும்பத்தினர் அனைவருக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்.
கலை கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி பற்றி தேவனூர் ப. ஜோதி லெட்சுமி அனுப்பிய கடிதம். சீனாவில் கொண்டாடும் விழாக்களையும் அவற்றின் சிறப்புகளையும் அறியமுடிந்தது. திபெத் மக்கள் கொண்டாடும் விழாக்கள் வியப்பூட்டியது. ஒவ்வொரு திங்களும் ஏதாவது ஒரு விழா கொண்டாடப்படும் என்பது புதுமையான செய்தி. கெட்ட ஆவியை விரட்டும் விழா, இறந்தோரை நினைவுகூரும் விழா, பிரமாண்டமான புத்தாண்டு விழா மதக்குருமார்களை உபசரிக்கும் விழா என விழாக்கள் மேல் விழாக்கள் கொண்டாடப்படுவதை அறிந்து வியப்படைந்தோம்.
அடுத்ததாக மின்னஞ்சல் பகுதி


வளவனூர் புதுப்பாளையம், எஸ். செல்வம்
ஏப்ரல் திங்கள் 3 ஆம் நாள் இடம்பெற்ற செய்தித் தொகுப்பு நிகழ்ச்சியில் •பாகிஸ்தானில் சின்சியாங் உய்கூர் கலைநிகழ்ச்சி• என்ற கட்டுரையைக் கேட்டேன். கலைநிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட ஒலியை அவ்வப்போது வழங்கி சுவையான முறையில் இந்த கட்டுரையை வழங்கினீர்கள். பாராட்டுக்கள். சீனாவின் தனிப்பண்பாடு, எந்த ஒரு நாட்டின் இரசிகர்களையும் ஈர்க்கக்கூடும். எனவே, பாகிஸ்தானிய இரசிகர்களின் வரவேற்பை சின்சியாங் உய்கூர் பிரதேச கலைநிகழ்ச்சி பெற்றதில் வியப்பு ஏதும் இல்லை. விரைவில் இந்தியாவிலும் இத்தகைய கலை நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கின்றேன்
சிறுநாயக்கன்பட்டி, கே.வேலுச்சாமி
மார்ச் திங்கள் 30.ம் நாள் இடம்பெற்ற சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சி கேட்டேன். ஒருநாட்டின் முன்னேற்றத்திற்க்கு முக்கிய காரணியாக விளங்குவதில் கல்வி வளர்ச்சியின் பங்கு அதிகமுண்டு. திபெத்தில் சீன அரசினால் துவக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் மூலமாக திபெத் மக்களின் அன்றாட வாழ்விலும், சமூகத்திலும் பல மாறுதல்கள ஏற்பட்டு ஏழைமுதல் செல்வந்தர் வரை அனைவருக்கும் இலவச கல்வியினை பெற்றார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியாக இருக்கின்றது.


முனுகப்பட்டு, பி. கண்ணன்சேகர்
இந்தியாவின் முக்கிய பத்திரிகையான இந்து நாளிதழ் திபெத்தின் சமூக சுதந்திரம் பற்றி தலையங்கம் எழுதியுள்ளதை அறிந்தேன். திபெத்தில் பண்டைகால பண்ணை அடிமைகள் வாழ்வு முற்றிலும் நீக்கப்பட்டு சுதந்திர வாழ்வை மக்கள் அனுபவித்து வருவதே உண்மையான நடப்பாகும். இதனை உறுதிப்படுத்தும் வகையில், வெளிநாட்டு பத்திரிகையாளர்களும், ஆய்வாளர்களும் திபெத்திற்கு சென்று பார்வையிட்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி இருப்பது பாராட்டதக்கது. திபெத் பற்றிய உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்கள் அனிமேல் எடுபடாது என்றும் இந்து நாளேடு தலையங்கம் எழுதியிருப்பது திபெத்தின் உண்மையான நிலையை உலகிற்கு வெளிப்படுத்துகிறது.
திருச்சி அண்ணாநகர், வி. டி. இரவிச்சந்திரன்
திபெத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து கலைமகள் விளக்கம் அளித்த நிகழ்ச்சியை கேட்டேன். திபெத்தில் மரம் வளர்ப்பதிலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் மக்கள் மிகவும் ஆர்வமுடன் இருப்பதை அறியத்தந்தார். திபெத்தின் இயற்கைச்சூழல் பாதிக்கப்பட்டால், இந்தியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகள் சொல்லொன்னா துயருக்கு ஆளாக நேரிடும். சீன அரசு இதில் அதிக கவனம் செலுத்தி நிதியும் ஒதுக்கீடு செய்து நடவடிக்கைகள் எடுப்பது நல்லதொரு திட்டம்.
செல்லூர், ராணி சீனிவாசன்
அருமையான‌ திபெத் எனும் த‌லைப்பில் இணைய‌த்த‌ள‌ பொது அறிவுப் போட்டியின் மூல‌ம், க‌ணினி அறிவையும், இணைய‌ வசதியை ப‌யன்படுத்தும் ஆர்வத்தையும், சாதார‌ண‌ மக்களிடம் விதைத்துவிட்டீர்கள். உல‌க‌ வானொலி வ‌ர‌லாற்றிலேயே முத‌ல் முறையாக‌, இணைய‌த‌ள‌த்தின் மூல‌ம் ஒரு பொது அறிவுப் போட்டியை ந‌ட‌த்த‌ முன்வ‌ந்துள்ள‌, நம‌து சீன‌ வானொலியின் எட்டு மொழிப்பிரிவு த‌லைவ‌ர்க‌ளையும் வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.
செந்தலை, என்.எஸ். பாலமுரளி
இந்திய தேசதந்தை மகாத்மா காந்தியின் பொருட்கள் ஏலத்தில் விடப்படுவதை நிறுத்துவது பற்றிய தகவல்களை செய்திகளில் செவிமடுத்தேன். காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்கள் இந்தியாவிற்கு சொந்தமான தொல்பொருட்கள். அவை காசுக்காக ஏலம் விடுகின்ற சாதாரண பொருட்களுக்கு மேலான மதிப்புடையவை. ஏலத்தை நிறுத்த முன்வந்த அமெரிக்க தொல்பொருள் சேகரிப்பாளர் James Otis அவர்களுக்கு எங்களது நன்றிகள்.


நாகர்கோவில், பிரின்ஸ் ராபட் சிங்
சீன அரசு சீனாவின் ஷிங்காய் மாகாணத்தில் வாழும் 12 லட்சம் திபெத்திய குழந்தைகளின் கல்வி, கல்விக்கு தேவையான பொருட்கள், உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை இலவசமாக வழங்க, தலா 14,500 ரூபாய் மதிப்பில் யுவானை சீன அரசு ஒதுக்கியது பாராட்டத்தக்கதாகும். இப்படி சீன அரசு திபெத் மக்களை கண்ணும், கருத்துமாக கவனித்து வரும்போது, தலாய்லாமா சீன அரசை குறைகூறுவது சரியல்ல.
வளவனூர், முத்துசிவக்குமரன்
அருமையான திபெத் என்னும் புதிய இணைய தள அறிவுப்போட்டி பற்றிய தகவல்களை வழங்கியிருப்பது, நேயர்களுக்கு மகிழ்ச்சியையும், அதில் பங்கு கொள்வதற்கான ஆவலையும் பெருமளவில் ஏற்படுத்தியிருக்கிறது. எட்டு மொழிப்பிரிவுகளில் மட்டும் நடத்தப்படும் இந்த போட்டியில், தமிழ் மொழியும் இடம்பெற்றிருப்பது தமிழுக்கும், எமது நேயர்களுக்கும் கிடைத்த பெருமையாகும். இதனை நல்லமுறையில் பயன்படுத்தி, நமது நேயர்கள் பெருமளவில் இந்த போட்டியில் பங்கு பெற்று, தமிழ் மொழிப்பிரிவுக்கு மேலும் பெருமை சேர்ப்பார்கள். மேலும், தமிழ்நாட்டில் உள்ள வேலூரில் சீன மொழி மையம் துவங்கப்பட்டிருப்பது, சீன மொழியினை பல்கலைக்கழக மாணவர்களும் பயில்வதற்கான நல்ல வாய்ப்பினை வழங்கும். சீனப் பண்பாட்டை கற்று வளம் பெற வழிவகுக்கும்.
விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன்
1959 மார்ச் 28 ஆம் நாள் திபெத்தின் பண்ணை அடிமை தொழிலாளர்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற்றனர். 50 ஆண்டுகள் நிறைவு நாளான இவ்வாண்டு மார்ச் 28 நாள் விடதலை விழாவிற்கு என் வாழ்த்துக்கள். நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் மேலண்ணம் பிளவுபட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது பற்றிய தகவல்களை கேட்டேன். இந்த மக்கள் நலப்பணிக்கு •புன்னகை தொடர்வண்டி• என்ற தலைப்பு பொருத்தமாக இருந்தது.
ஊட்டி; எஸ்.கே.சுரேந்திரன்
மலர்ச்சோலை நிகழ்ச்சியில் சீனாவின் வடகிழக்கு பகுதியிலுள்ள ஜீலிங் மாநிலத்தில் மின்கலன்களைப் பயன்படுத்தி 70 பேருந்துகளை இயக்கப்போவதைப் அறிந்தேன். மேலும் முன்னேறிய தொழில் நுட்பத்துடன் கூடிய மின்கலன்கள் மூலம் 300 கிலோ மீட்டர் வரை இப்பேருந்துகளில் பயனம் செய்ய முடியும் என்ற கூடுதல் தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது. இப் பேருந்துகள் மூலம் பெட்ரோலியம் அதிக அளவில் சேமிக்கப் படுவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் சுற்றுப்புற சீர்கேட்டை தடுத்து, பசுமைமயமாக்கத்தை தொடர்ந்து நிலைநிறுத்தப்படுத்தும் இது போன்ற சீன அரசின் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை.


1 2