
 2009ம் ஆண்டு, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டதன் பொன்விழாவாகும். இந்த 50 ஆண்டுகளில், இப்பிரதேசத்தின் சமூகம் மற்றும் பொருளாதாரத்தின் பன்முக வளர்ச்சியுடன், திபெத்தில் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வாழ்க்கையில், தலைகீழான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
Chosphel Tsering, Rinbung மாவட்டத்தில் ஒரு வறுமையான அடிமைக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது குடும்பத்தினர் தலைமுறைத் தலைமுறையாக, அடிமைச் சொந்தகாரர்களுக்கு ஆடுமாடுகளை மேய்ப்பதன் மூலம் வாழ்க்கை நடத்தினர். 1959ம் ஆண்டு, திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின், குழந்தையாக இருந்த Chosphel Tsering, தனது கடினமான அடிமை வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்று, சுதந்திரமான வாழ்க்கையை வரவேற்றார். 1982ம் ஆண்டு, அவர், Darhuawug என்ற கட்டிடக் குழுவை நிறுவினார். 20க்கு மேலான ஆண்டுகால முயற்சியின் மூலம், அவர், உள்ளூரில் புகழ்பெற்ற விவசாயி தொழில் முனைவோராக மாறியுள்ளார்.
1 2 3
|