பறக்கும் மனிதர்

வானில் பறப்பது இப்போது சாத்தியமே. அதனால் தான் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தை இன்று சில மணிநேரங்களில் கடந்து மகிழ்ச்சி அடைகிறோம். வானில் பறந்து செல்வதற்கு விமானம், ஹெலிஹாப்டர் அல்லது ஏவூர்தி என ஏதாவது ஒன்று வேண்டும் தானே. ஆனால் இளைஞர் ஒருவர் அவை ஒன்றும் இல்லாமல் பறந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! இரண்டு வாரங்களுக்கு முன்னர் தனது வீட்டின் மேற்பரப்பில் இரும்பு அமைப்பொன்றை பொருத்திக் கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் காற்றால் அடித்து செல்லப்பட்டார். 15 மீட்டர் உயரமுள்ள மரத்தில் தொங்கி கொண்டிருந்த அவரை, தீயணைப்பு வீரர்கள் மிக பெரிய ஏணி மூலம் மீட்டனர். பெய்ஜிங்கின் Shijingshan மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு, மிக வேகமாக காற்று வீசியபோது இது நிகழ்ந்துள்ளது. Shijingshan மாவட்டத்தில் தான் சர்வதேச சீன வானொலி நிலையம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1 2
|