லீப் வினாடி

லீப் ஆண்டாக இருந்தால் நமக்கு ஒரு நாள் அதிகமாக கிடைக்கும் என்பது நாமறிந்ததே. 2008 ஆம் ஆண்டு லீப் ஆண்டாக இருந்ததால் பெப்ரவரி திங்களில் ஒரு நாள் கூடுதாலக அதாவது 29 ஆம் நாள் நமக்கு கிடைத்தது. புவியின் சுழற்சிக்கு ஏற்றப்படி அமையும் விதமாக 2008 ஆம் ஆண்டில் ஒரு வினாடி லீப் வினாடியாக மேலும் சேர்க்கப்பட்டது. சர்வதேச புவி சுழற்சி சேவையகம் நேர அளவில் செய்துள்ள 24 வது திருத்தம் இதுவாகும். இதற்கு முன்னால் 1971 ஆம் ஆண்டு ஒரு லீப் வினாடி சேர்க்கப்பட்டது. பிரிட்டனின் லண்டனிலிருந்து தெரிவிக்கப்படும் கிரீன்விச் நேரப்படி, 2008 டிசம்பர் திங்கள் 31 ஆம் நாள் முடிவில் இந்த லீப் வினாடி சேர்க்கப்பட்டது. சீனாவின் Shaanxi மாநிலத்தின் தலைநகரான Xi'an னிலுள்ள சீன தேசிய மணிநேர சேவை மையத்தின் படி, சீன மணிநேரம் கிரீன்விச் நேரத்தை விட 8 மணிநேரம் முன்னதாக உள்ளதால் காலை 7.59 மணிக்கு அந்த லீப் வினாடியான ஒரு வினாடி சேர்க்கப்ப்பட்டுள்ளது. வேவ்வேறு ஆண்டுகளில் வேறுப்பட்ட வேகத்தில் புவி சுழலுவதே இதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 2
|