• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-22 14:45:10    
உறுதியான மனநிலை கொண்ட உடல் சவால் மிக்க Wang Dong Dong அ

cri

Wang Dong Dong என்பவர், உடலளவில் சவால் கொண்டவர். அவரது உயரம் 1.3 மீட்டர் மட்டுமே. வீட்டு பயன்பாட்டு மின்சாரப் பொருட்களைப் பழுது பார்க்கும் அவரது தொழில் நுட்பம் தலைசிறந்து விளங்குகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, அவர் 247 பணி பயிலுனர்களுக்கு இத்தொழிலை கற்றுக்கொடுத்து வருகின்றார்.

1958ஆம் ஆண்டு, Jiang Xi மாநிலத்தின் Gui Xi நகரில் Wang Dong Dong பிறந்தார். அவருக்கு இரண்டு வயதாக இருந்த போது, கழுத்தெலும்பு கோளாறு மற்றும் போலியோ தொடர்பான நோய்களால் அவர் துன்பப்பட்டார். அவருக்கு சரியான சிகிச்சை அளிக்க, அவரது தந்தை அவரை கொண்டு, பல்வேறு இடங்களுக்குச் சென்றார். இறுதியில் வேறு வழியில்லை என்றறிந்த அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சிகிச்சையைக் கைவிட்டனர். இருந்த போதிலும் Wang Dong Dong உறுதியான மனநிலையோடு வளர்ந்து வந்தார். அவர் கூறியதாவது:

"நான் உடல் சவால் மிக்கவராக இருந்த போதிலும், நல்ல உடல் நலத்துடன் கூடியவர் போல் செயல்பட முயற்சி செய்ய வேண்டும்.

அதில் உறுதியாக நின்றால், வெற்றி பெறுவது உறுதி." என்றார், அவர்.

இந்த நம்பிக்கை உணர்வுடன், Wang Dong Dong பாடுபட்டு வருகின்றார். அவர் பள்ளியில் கல்வி பயின்றபோது, வகுப்பில் அவரின் மதிப்பெண் முன்னணியில் இடம்பெற்றது.

1977ஆம் ஆண்டு, Wang Dong Dong மேனிலை பள்ளி படிப்பை முடித்தார். தமது முயற்சியால், தம் குடும்பத்தின் வறுமையை மாற்ற அவர் உறுதி பூண்டார். சீராக நடந்து செல்லவும், கடும் உடல் உழைப்பில் ஈடுபடவும் முடியாததால், தாம் ஆர்வம் கொண்டிருந்த, வீட்டு பயன்பாட்டு மின்சாரப் பொருட்களை பழுது பார்க்கும் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள அவர் தீர்மானித்தார்.

1 2