• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-22 14:45:10    
உறுதியான மனநிலை கொண்ட உடல் சவால் மிக்க Wang Dong Dong அ

cri

6 திங்கள் காலம் பழுது பார்ப்பது தொடர்பான அறிவுகளை அவர் முதலில் சுய முயற்சியில் கற்றுக்கொண்டார். அதற்கு பின் மேற்படிப்புக்காக அவர் Nan Chang நகருக்குச் சென்றார். படிப்பு முடிவுக்கு வந்தவுடன், கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து, வீட்டுப் பயன்பாட்டு மின்சாரப் பொருட்களை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடத் துவங்கினார்.

அந்த காலத்தில் தான், கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி, சீனர்களிடம் அறிமுகமானது. தொலைக்காட்சி பெட்டியைப் பழுது பார்க்கும் தொழில் நுட்பத்தை Wang Dong Dong முக்கியமாக கற்றுக்கொள்ள தொடங்கினார். தமது குடும்பத்தின் பல்லாண்டு பண சேமிப்பைச் செலவிட்டு, அது தொடர்பான அதிக நூல்களையும் உதிரி பாகங்களையும் அவர் வாங்கினார். தொலைக்காட்சி பெட்டியின் மின்சுற்று வரைபடத்தை உணர்வுபூர்வமாக ஆராய்ந்த பின், அவர் உதிரி பாகங்களைப் பொருத்த ஆரம்பித்தார்.

தொலைக்காட்சிப் பெட்டியில் பல்வேறு உதிரி பாகங்களை வெகு விரைவில் பொருத்தும் பொருட்டு, நள்ளிரவு இரண்டு மணி வரை அவர் ஆராய்வதுண்டு.

இரவு பகலாக, Wang Dong Dong உதிரி பாகங்களை நீக்கி, பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார். படிப்படியாக, தொலைக்காட்சிப் பெட்டியைப் பழுது பார்ப்பதில் அவர் தேர்ச்சி பெற்றார். அக்காலத்தில், இதில் தேர்ச்சி பெறுபவர் மிக அரிது.


1 2