• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-21 11:24:48    
நேயர்களின் கருத்துக்கள்

cri

தமிழன்பன் சீன வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு நீங்கள் அவற்றிற்கு வழங்கும் பதிலாய் அமையும் நேயர் நேரம் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு பொது அறிவுப் போட்டி தொடங்கியுள்ளதை நினைவூட்ட விரும்புகின்றோம்.
கலை நேயர்களே நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அருமையான திபெத் என்னும் இணையத்தள பொது அறிவுப்போட்டி இன்று தொடங்கிவிட்டது. இப்போட்டி மே 31 ஆம் நாள் வரை நடைபெறுகிறது.
தமிழன்பன் என்ன மே 31 ஆம் நாள் வரை காத்திருக்க போகிறீர்களா? உடனே சென்று இணையதளம் மூலம் சரியான விடையை கண்டுபிடித்து பதிவு செய்யுங்கள். பரிசு பெறுவோரில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.
கலை பரிசு வெல்ல வாழ்த்துக்கள்


தமிழன்பன் சரி இன்றைய நிகழச்சிக்க செல்வோமா? முதலில் கடிதப்பகுதி.
கலை நட்புப் பாலம் நிகழ்ச்சி பற்றி தாசப்பகவுண்டன் புதூர் எஸ் சுதர்ஷன் அனுப்பிய கடிதம். ஷியான் நகரம், பெய்ஜிங்கிற்கு அடுத்தப்படியாக முன்னேற்றம் அடைந்த நகரம் என்பதையும், ஆசியாவிலே மிக சிறந்த விளையாட்டு அரங்கு ஷியானில் உள்ளது என்றும் தெரிந்து கொண்டேன். அங்கு நடைபெற்ற நடன நிகழ்ச்சி வேறு எங்கும் காணமுடியாத அளவுக்கு அருமையாக இருந்தது என்பதை பெய்ஜிங்கில் பயணம் மேற்கொண்ட பல்லவி கே. பரமசிவன், பி. ஏ. நாச்சிமுத்து ஆகியோர் விளக்கினர். இது சீனாவில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் ஆர்வத்தை தூண்டியது.
தமிழன்பன் மணச்சநல்லூர் ந. சண்முகம் எழுதிய கடிதம். தமிழ் மூலம் சீனம் வழியாக சீன மொழியை தமிழில் கற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்பை சீன வானொலி எங்களுக்கு அளித்திருக்கிறது. அது மட்டுமல்ல பல ஆங்கில சொற்களுக்கு செந்தமிழ் சொற்களை பயன்படுத்தும் சீன வானொலியை கேட்பது அனிமையாக உள்ளது. அதனை சிறப்புடன் செயல்படுத்தும் தமிழ்ப்பிரிவின் தலைவி கலையரசி அவர்களுக்கும் சீன தமிழ் குடும்பத்தினர் அனைவருக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்.
கலை கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி பற்றி தேவனூர் ப. ஜோதி லெட்சுமி அனுப்பிய கடிதம். சீனாவில் கொண்டாடும் விழாக்களையும் அவற்றின் சிறப்புகளையும் அறியமுடிந்தது. திபெத் மக்கள் கொண்டாடும் விழாக்கள் வியப்பூட்டியது. ஒவ்வொரு திங்களும் ஏதாவது ஒரு விழா கொண்டாடப்படும் என்பது புதுமையான செய்தி. கெட்ட ஆவியை விரட்டும் விழா, இறந்தோரை நினைவுகூரும் விழா, பிரமாண்டமான புத்தாண்டு விழா மதக்குருமார்களை உபசரிக்கும் விழா என விழாக்கள் மேல் விழாக்கள் கொண்டாடப்படுவதை அறிந்து வியப்படைந்தோம்.


தமிழன்பன் மதுரை திருமங்கலம் ப. கதிரேசன் எழுதிய கடிதம். விளையாட்டுச் செய்திகள் நிகழ்ச்சிக் கேட்டேன். ஆசிய விளையாட்டுப் போட்டி, நிதி நெருக்கடியின் பின்னணியில் அதை இப்போட்டியை நடத்துவது, கூடைப்பந்து, கால்பந்து விளையாட்டுப் போட்டிகள் பற்றி செய்திகள் இடம்பெற்றன. வீரர்கள், வீராங்கனைகள் பற்றிய செய்திகளும் அறிவிக்கப்பட்டன. பல்வேறு விளையாட்டுகளின் தொகுப்பாக விளையாட்டுச் செய்திகளை அமைத்திருந்த கலைமணிக்கு பாராட்டுக்கள்.
கலை இலங்கை மாவடிசேனையிலிருந்து சப்ரின் அனுப்பிய கடிதம். ஒரு நாள் நான் பாடங்களை படித்து கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டில் சீன வானொலி தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பானதை கேட்டு உடனே எங்கள் வீட்டு வானொலியில் சீன தமிழ் ஒலிபரப்பை கேட்க தொடங்கினேன். படிக்காமல் ஏன் நேரத்தை வீணடிக்கிறாய் என திட்டிக்கொண்டே என்னுடைய தாயும் வேண்டா வெறுப்போடு வானொலியை கேட்டார். அடுத்த நாள் நான் சிறப்பு வகுப்பு ஒன்றிக்கு போய்விட்டு சற்று தாமதமாக வர நேர்ந்தது. எனக்கே வியப்பு. எனது தாய் சீன வானொலியை கேட்டு கொண்டிருந்தார். சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடியது என்பதை எனது அனுபவத்தில் அப்போது அறிந்து கொண்டேன்.
தமிழன்பன் பரமத்தி வேலூர் வட்ட தலைமை சீன வானொலி மன்றத் தலைவர் மீனாட்சிபாளையம் என். கார்த்திகேயன் 2009 ஆம் ஆண்டின் முதலாவது மன்றக்கூட்டம் பற்றி அனுப்பிய கடிதம். இவ்வாண்டின் முதல் கூட்டம் ஜனவரி 18 ஆம் நாள் முற்பகல் 10 மணிக்கு பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. சீன மகக்ளுக்கு வசந்த விழா வாழ்த்தும் நேயர்களுக்கு பொங்கல் விழா வாழ்த்துகளும் தொரிவிக்கப்பட்டன. மூன்று திங்களுக்கு ஒரு மறை நடத்தப்பட்டு வந்த இக்கூட்டம் நான்கு திங்களுக்கு ஒரு மறை நத்த முடிவெடுக்கப்பட்டது. அடுத்த கூட்டம் ஆம திங்கள் 17 ஆம் நாள் நடைபெறவும் முடிவு செய்யப்ட்டுள்ளது.


கலை மலேசியாவிலிருந்து எம். இராமசந்திரன் அனுப்பிய கடிதம். நேயர் விருப்பம் நிகழ்ச்சி கேட்டேன். ஒலிபரப்ப்பட்ட பாடல்கள் அனைத்தும் மிகவும் இனிமையாக இருந்தன. "மனிதன் நினைப்பதுண்டு", "காதலின் தீபமொன்று ஏற்றினாளே", "மலர்ந்தும் மலராத" மற்றும் சீன பாடல் அனைத்தும் மெய்மறந்து இரசிக்க வைத்தன. பாராட்டுக்கள்.
தமிழன்பன் அடுத்தாக கோயம்புத்தூர் சு. சரவணன் அனுப்பிய கடிதம். சீன தமிழ் ஒலிபரப்பு என்னும் போதினிலே, இன்ப தேன் வந்து பாயுது காதினிலே. சீன வானொலி தமிழ்ப் பிரிவின் நிகழ்ச்சிகளை DTH யின் இலவச இணைப்போடு இணைக்கலாமே. அப்படி செய்தால் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு இன்னும் பல மக்களுக்கு சென்றடையும். இதற்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால் அதற்கான ஏற்பாடுகளை நிறைவேற்ற காத்திருக்கிறோம்.
கலை சரவணன், சீன வானொலியை பரவலாக்கும் முயற்சியில் நீங்கள் தெரிவித்துள்ள கருத்தை வரவேற்கின்றோம். அதற்கான நேரம் வரும்போது தங்களின் உதவியை நாடுவோம். நன்றி.

1 2