• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-21 11:24:48    
நேயர்களின் கருத்துக்கள்

cri

மின்னஞ்சல் பகுதி
செந்தலை, என்.எஸ். பாலமுரளி
எப்ரல் 8 ஆம் நாள் செய்திகள் கேட்டேன் வறுமை ஒழிப்பு பணியில் சீனா மகத்தான சாதனை கண்டுள்ளது. வறுமை ஒழிப்பு என்பது சாதரண விசயம் அல்ல. அது போராட்டம் நிறைந்தது என்பதே உண்மை. வறுமையை அறிய தனிநபர் பெறுகின்ற வருமானம் நுகர்வு ஆற்றல் போன்றவை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. வறுமை ஒழிப்பில் சீனா கண்டள்ள சாதனைகள பார்க்கும்போது இன்னும் 20 ஆண்டுகளில் வறுமையை சீனா முற்றிலும் அழித்துவிடும் என்று நான் நம்புகிறேன்.
விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன்
அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் சுட்டும் விழிச்சுடரே என்ற தலைப்பில் தமிழன்பன் கூறியது, நாம் தினமும் கூறுவதுதான். நடந்து கொண்டிருக்கும் உண்மை நிகழ்வுகள்தான். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது பூங்கா, தெரு, மரம் எல்லாம் விளையாடும் இடங்களாக இருக்கும். அதுவும் காலத்திற்கு ஏற்ப விளையாட்டும் மாறுதலாக இருக்கும். பள்ளி விட்டு வீட்டிற்கு வந்து தெருவில் இருட்டும் வரை விளையாடுவோம். சிறுமிகளும் அப்படித்தான். தற்போது சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் திறந்தவெளிக்கு வருவது இல்லை. இதனால் பார்வை மட்டுமல்ல மனித உறவும் கெட்டுவிட்டது. பயன்படுத்தப்படாத பொருள் நிச்சயம் பாழாகிப் போகும். மரம் வளருங்கள், நெகிழ் பொருட்களை தவிர்த்து விடுங்கள் என்பதுபோல், திறந்த வெளியில் விளையாடுங்கள் என்பதையும் இனி தெரிவிக்க வேண்டும். அருமையான தகவல் தந்த சீன வானொலிக்கு நன்றி.
வளவனூர் புதுப்பாளையம், எஸ். செல்வம்
ஏப்ரல் திங்கள் 7 ஆம் நாள் இடம்பெற்ற முதலாவது •செய்தித் தொகுப்பு• நிகழ்ச்சியில் •லீசாங்சுன்னின் சொற்பொழிவு• என்ற கட்டுரையைக் கேட்டேன். மக்கள் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர் லீசாங்சுன் அவர்கள், தென்கொரிய தலைநகர் சியோலில், கொரியாவின் இருநூறுக்கும் அதிகமான பொருளாதார துறையினரிடம் நடத்திய உரையின் உள்ளடக்கங்களை அறிந்து கொண்டேன். பல்வேறு துறைகளிடையான பரிமாற்றம் வேகமாக நடைபெறுவது, உலகளாவிய நிதி நெருக்கடியின் தாக்கத்தை, தீவிரத்தை பெரிதும் குறைக்கும் என நம்புகின்றேன். ஆக்கபூர்வமான சாதனைகளை ஈட்டித்தரும் வகையில் தென்கொரியாவில் பயணம் மேற்கொண்டு வரும் லீசாங்சுன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஊத்தங்கரை, கவி. செங்குட்டுவன்
6 ஆம் நாளில் இடம் பெற்ற செய்திகள் கேட்டேன். அதில் தமிழகத்தின் வேலூர் நகரில் அமைந்துள்ள வேலூர் தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தில் துவங்கிய சீன மொழி மையம் பற்றியும் அதில் இந்தியாவிலுள்ள சீனத் தூதர் சாங் யேன் உள்ளிட்ட பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர் எனவும் அறிந்து மிக்க மகிழ்வடைந்தேன். சீன மொழி மையம் நிறுவப்படுதல், இந்தியாவில் சீன மொழியும் பண்பாடும் வரவேற்கப்படுவதை குறிக்கின்றது என்று வேலூர் தொழில் நுட்ப பல்கலைகழகத்தின் வேந்தர் திரு. ஜி.விஸ்வநாதன் அவர்கள் துவக்கவிழாவில் கூறிய கருத்து மிகவும் வரவேற்கப்பட வேண்டியது.
முனுகப்பட்டு, பி. கண்ணன் சேகர்
சர்வதேச வர்த்தக பாதுகாப்பு வாதத்தால் பாதிக்கப்பட்ட சீனத் தொழில் நிறுவனங்கள் என்ற மக்கள் சீனம் கேட்டேன். உள்நாட்டு வர்த்தக பாதுகாப்பு என்ற நோக்கில் தேவையற்ற காரணங்கள் காட்டி சீனாவின் பொருட்களின் இறக்குமதிக்கு சில நாடுகள் தடை விதித்துள்ளன. எனவே, சீன தொழில் நிறுவனங்கள் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் வேலைவாய்ப்புத் துறையும் பாதிப்புக்குள்ளாவதாக அறிகிறேன். கடந்த ஆறுமாத காலத்தில் சீனாவின் ஏற்றுமதி தொழில் துறையும் மந்தமாகி போனதால் சீன உற்பத்தி நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறன. வெளிநாடுகளுக்கு சீன நிறுவனங்கள் தங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்ய சீன மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதின் மூலம் இந்த நிலையை தீர்க்க முடியும்.
விஜயமங்கலம், குணசீலன்
நேருக்கு நேர் நிகழ்ச்சியில் திரு கலைவாணன் செவ்வி மிகவும் சிறப்பாக இருந்தது. வானொலியின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை மிகவும் பெரியது. இந்த இயந்தர தனமான உலகில் சிற்றலை வானொலி கேட்பது என்பது சற்று சிரமமான செயல் எனெனில் பண்பலை வானொழியை போல துல்லியமாக இல்லாமல் ஏற்ற இரக்கத்துடன் இருக்கும். இருப்பினும் நமது சீன வானொலியை கேட்டு கடிதம் எழுதுவது பாராட்துக்குறியது. தான் மட்டும் கேட்பதோடு நின்று விடாமல் மற்றவர்களையும் கேட்க தூண்டும் பண்பு கொண்ட கலைவாணன் பாராட்துக்குரியவர்
மதுரை அண்ணாநகர், R.அமுதாராணி
நூசியாக் ஆறு சீனாவின் தென்மேற்கு பகுதியில் மிகபெரிய ஆறு என்பதை அறிந்தேன். அங்குள்ள நூசியாக் பள்ளதாக்கு மனித நாகரிகம் மற்றும் இயற்கையான அமைவிடம் எனவும் தெரியவந்தது. நூசியாக் பள்ளதாக்கில் கல் சந்திரன் என்னும் மண்டலம் தொலைவில் இருந்து பார்த்தால் வானில் உள்ள சந்திரனை போன்று காட்சியளிக்கிறதாம். இத்தகைய இயற்கை அன்னையின் படைப்பை நாள்தோறும் ரசித்து கொண்டே இருக்கலாம்.
சிறுநாயக்கன்பட்டி, கே. வேலுச்சாமி
மார்ச் திங்கள் 4ம் நாள் அன்று இடம் பெற்ற கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியினை கேட்டேன் "அருமையான திபத் என்ற தலைப்பிலான இணைய தள பொது அறிவுப்போட்டியினை தமிழ் பிரிவு நடத்துவதன் மூலமாக எண்ணற்ற தமிழ்பிரிவு நேயர்களை தமிழ் பிரிவு இணைய தளம் தன்பால் ஈர்க்க நல்ல வாய்ப்பினை ஏற்படுத்தி தந்திருக்கின்றது. அனைத்து நேயர்களும் இப்போட்டியில் கலந்துகொண்டு தமிழ்பிரிவின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பினை அளிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். எனது பங்களிப்பும் தொடரும்.


1 2