• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-23 14:54:45    
வெள்ளை மாளிகை நோக்கி

cri
வெள்ளை மாளிகை நோக்கி

16 வயதான சிச்சுவான் மேனிலைப்பள்ளி மாணவி தேர்தெடுக்கப்பட்ட அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமாவின் பதவி ஏற்புவிழாவில் பங்கேற்கவுள்ளார். அவர் தான் Li Zizi. இவருடைய குடும்பம் சிச்சுவானை சேர்ந்ததாக இருந்தாலும், ஐப்பானில் பிறந்து அங்கேயே வளர்க்கப்பட்டார். ஆகஸ்ட் திங்கள் சிச்சுவான் மாநிலத்திற்கு வந்து செந்து நகரில் நடைபெறும் வெளிநாட்டு மொழி பயிற்சிப் பள்ளியில் பயின்று வருகின்றார். கடந்த கோடைகாலத்தில் வாஷிங்டனில் நடைபெற்ற உலக இளம் தலைவர்களின் மாநாட்டில் இவர் கலந்து கொண்டார். அந்த மாநாட்டை நடத்துகின்ற இலாப நோக்கமற்ற அமெரிக்க நிறுவனம், தனது நடவடிக்கையில் கலந்து கொண்ட சில மாணவரை அமெரிக்க அரசுத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்புவிடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. அவ்வாறே Li Zizi இந்த அரியவாய்ப்பை பெற்றுள்ளார்.

இவர் தான், தனது சொந்த உழைப்பால் திரட்டிய 500 அமெரிக்க டாலரை சிச்சுவான் வென்சுவான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி அனைவரின் பாரட்டுபெற்றவர். மூன்றாம் வகுப்பு படிக்கின்ற இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவை இவரே ஏற்றுவருகிறார். தானும் வெளிநாட்டில் வளர்க்கப்பட்டதால் ஒபாமாவுக்கும் தனக்கும் ஒற்றுமை உண்டு என்று அமெரிக்க அரசுத்தலைவர் பதவிஏற்பு விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றுள்ள லி குறிப்பிடுகிறார்.

1 2