சிறுவயதில் திருமணம்

58 வயதான ஒருவருக்கு 8 வயது சிறுமியை அவளுடைய தந்தை மணமுடித்து வைத்துள்ளதால் அச்சிறுமிக்கு மணமுறிவு அளிக்க கோரி தொடுக்கப்ட்ட வழக்கை சௌதி அரேபிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அந்த சிறுமி வயதுக்கு வரும் வரை காத்திருக்க நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. சிறுமியின் சார்பில் விவகாரத்துக்கான கோரிக்கையை கணவனிடமிருந்து விவகாரத்து பெற்றுள்ள சிறுமியின் தாயார் விண்ணப்பித்திருந்தார். மணமகனும், சிறுமியின் தந்தையும் திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு ரியாத்தின் வடக்கே Unayzah என்ற இடத்திலுள்ள நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அச்சிறுமி தொடக்கப்பள்ளியில் நான்காவது வகுப்பு படிப்பை தொடங்கவுள்ளார்.
இச்சிறுமி தயாயோடு வாழ்வதால் அவள் கணவனோடு இணைந்து வாழவில்லை என்றும், சிறுமி 18 வயது அடையும் வரை இணைந்து வாழக்கூடாது என்று சிறுமியின் தந்தை மணமகனிடம் வாய்மொழி நிபந்தனை விதித்திருப்பதாகவும், முன்கூட்டியே 30,000 ரியால் வரதட்சனையாக செலுத்தி அந்த சிறுமியை திருமணம் முடித்து கொடுக்க அவளின் தந்தை ஒத்துக்கொண்டுள்ளதாகவும் பெயர் தெரிவிக்க விரும்பாத உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமியின் தாயார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். ஓடி விளையாடும் சிறியபருவத்தில் திருமணம், விவாகரத்து என அலக்கழிக்கப்படும் இந்த சிறுமி அவற்றை பற்றியும் என்ன தான் தெரிந்திருப்பார் என்பதே கேள்விகுறி. 1 2
|