• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-30 09:24:24    
செய்திகளுக்காய் இணையம்

cri
செய்திகளுக்காய் இணையம்

செய்தி சேவை பன்முகங்களில் வளர்ந்துவரும் துறையாகிவிட்டது. அதிலும் இணைய வசதிக்கு பின்னர் செய்தி துறை புதிய பாதையில் முன்னேறிவருகிறது. சீனாவில் இணையவசதியை பயன்படுத்துவோர் பெருகி வருகிறார்கள். ஏறக்குறைய 206 மில்லியன் சீன மக்கள் செய்தி அறிய இணையத்தை பயன்படுத்துவதாக சீன சமூக அறிவியல் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. 2007 ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட பல ஆண்டுகள் இல்லாத அதிக பனிப்பொழிவு, 2007 மே திங்கள் சிச்சுவான் மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் மற்றும் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு ஆகியவை செய்திகளை உடனுக்குடன் அறியவர இணையத்தை நாடுகின்ற மக்களை அதிகப்படுத்தியுள்ளன. கடந்த ஜூன் திங்கள் 253 மில்லியன் சீனர்கள் இணையம் பயன்படுத்துகின்றவர்களாக இருந்தனர். இதுவே, உலகிலேயே அதிகமான எண்ணிக்கையை பதிவாகும். தற்போது இந்த எண்ணிக்கை 290 மில்லியன் ஆகியுள்ளது. 2007 ஆம் ஆண்டை விட 80 மில்லியன் இணைய பயன்பாட்டாளார்கள் அதிகரித்துள்ளதாக சீன இணைய வலைபின்னல் தகவல் மையம் தெரிவித்தது. இதில் 80 விழுக்காட்டினர் தகவல் மற்றும் செய்திகளுக்காக இணைய வசதியை பயன்படுத்துகின்றனர். 60 விழுக்காட்டினர் தேடல் சேவைக்காக பயன்படுத்துகின்றனர். இணைய வசதியை பயன்படுத்துவோரில் 69 விழுக்காட்டினர் 30 வயதிற்கு குறைந்த இளைஞர்களாக இருப்பதை சீன இணைய வலைபின்னல் தகவல் மையம் கண்டுபிடித்துள்ளது. சின்குவா செய்தி நிறுவனம் பல மொழிகளில் தேடுவதற்கு வசதியாக சின்குவா தேடுதல் சேவையை உருவாக்கியுள்ளது. அதன்மூலம் சீன, ஆங்கில, பிரெஞ்சு, ஸ்பானிய, ரஷிய மற்றும் அரேபிய மொழிகளில் தரவுகளை தேடலாம்.

1 2