கொழுப்பு எரியாற்றலாக

மனிதனின் கொழுப்பை பயன்படுத்தி எரியாற்றல் தயாரித்த அமெரிக்க ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மருத்துவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மனித கொழுப்பை பயன்படுத்தி எடுக்கப்பட்ட எரியாற்றலை அவருடைய மற்றும் அவரது தோழியின் வாகனங்களுக்கு எரியாற்றலாக பயன்படுத்தியதால் அந்த மருத்துவரின் ஒட்டுறுப்பு அறுவைசிசிச்சை மருத்துவ உரிமம் பறிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் Beverly Hills யில் வாழ்கின்ற ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சை மருத்துவர் Craig Alan Bittner, மனிதரின் கொழுப்பிலிருந்து எரியாற்றல் பெற முயன்றது புவியை காப்பதற்கான நல்ல நோக்கத்திற்காகவே என்று சரியான ஆதாரங்களே இல்லாமல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தங்களது உடலிருந்து அதிக அளவு கொழுப்பை எடுத்து தோற்றங்களை விகாரப்படுத்தி விட்டதாக மூன்று நோயாளிகள் அவருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர். ஆனால் எரியாற்றல் தயாரிக்க அவர்களுடைய கொழுப்புகளை பயன்படுத்த நோயாளிகள் உடன்பட்டதாக அம்மருத்துவர் தெரிவித்துள்ளார். மனித கழிவுகளை பயன்படுத்தி வாகனங்களுக்கான எரியாற்றல் உற்பத்தியை கலிபோர்னியா சட்டப்படி தடை செய்துள்ளதால், மருத்துவர் Alan Bittner ரின் இச்செயல் சட்டத்திற்கு புறம்பானது என்று கலிபோனிய பொதுசுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1 2
|