• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-28 09:13:10    
நேயர்களின் கருத்துக்கள்

cri

தமிழன்பன் உங்களுடைய கருத்ததுக்களின் கேர்வையாய் தொடரும் இந்நிகழ்ச்சியில் உங்கள் கடிதங்கள் இடம்பெற சீன வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு அவை பற்றிய கருத்துக்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். மின்னஞ்சல் மூலமாகவோ, கடிதம் மூலமாகவோ உங்கள் கருத்துக்களை அனுப்பலாம்.
கலை "அருமையான திபெத்" என்ற இணையதள சுற்றுலா பொது அறிவுப் போட்டி தொடங்கிவிட்டது. இணையதள பக்கத்திலேயே விடைகளை நிரப்பி எங்களுக்கு அனுப்புங்கள். அந்த விடைகள் அடங்கியிருக்கும் திபெத் பற்றிய கட்டுரைகளையும் இணையதளத்திலேயே வாசிக்கலாம்.
தமிழன்பன் கலை இன்றைய நிகழ்ச்சிக்கு செல்வோமா?
கலை சரி
தமிழன்பன் முதலில் கடிதப்பகுதி
கலை முதலாவதாக வேலூர் குமார ராமமூர்த்தி செய்தித் தொகுப்பு பற்றி அனுப்பிய கடிதம். சீனாவில் 64 இலட்சம் பட்டதாரிகள் வேலைவாய்ப்பு பெற காத்திருக்கிறார்கள் என்று அறிந்தேன். இவர்கள் கிராமப்புறங்களுக்கு சென்று சேவைப்புரியும் பணிகளுக்கு ஊக்கமுடன் முன்வரவேண்டும். இவ்வாறு கிராமப்புறங்களுக்கு சென்று பணிபுரிவதற்கு உலகெங்குமுள்ள நாட்டுப்பற்றும், தேசப்பற்றும் மிக்கப் பட்டதாரிகள் முன்வர வேண்டும். பல்கலைக்கழகங்களில் இவர்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கும் அதேவேளையில் கிராமபுறங்களில் ஆசிரியர்களாக, மருத்துவர்களாக பணியாற்றும் தன்னார்வம் பெறவும் இப்பட்டதாரிகளை தயார்படுத்துவது நாட்டிற்கு நன்மை பயக்கும்.
தமிழன்பன் பெரிய காலாப்பட்டு பெ. சந்திரசேகரன் சீன தேசிய இனக்குடும்பம் பற்றி எழுதிய கடிதம். திபெத் இன மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் சுற்றுலா பற்றி ஜெயா வழங்கிய கட்டுரையை கேட்டேன். கடல் மட்டத்தில் இருந்து மிக உயரமான இடத்தில் உலகின் அழகான பனி மலையாய் அமைந்த மின்யுன் கிராமம் மிகவும் அழகானது என்பதை அறிய முடிந்தது. இங்கு வருகின்ற சுற்றுலா பயணிகளால் அந்த கிராம மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளதை அறியும்போது மகிழ்ச்சியாக உள்ளது.


கலை சத்திரப்பட்டி இ.எஸ்.எம். பாண்டிய ராசா செய்திகள் பற்றி அனுப்பிய கடிதம். தைவான் நீரிணைப் பகுதியில் இருகரை விமான மற்றும் கப்பல் போக்குவரத்து, அஞ்சல் சேவை ஆகியவை செயல்படுவதை கேட்டு மகிழ்ந்தேன். தைவான் சீனாவின் ஓர் அங்கமே. உலகில் ஒரே ஒரு சீனா தான் என்பதில் மாற்றமில்லை. மேலும், 5.47 கோடி சுற்றுலாப் பயணிகள் சீனா வந்துள்ளதையும், 4 கோடி சீன மக்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளதையும் அறிந்தேன். 13 கோடி சுற்றுலாப் பயணிகள் சீனா வருவர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு சீனா அதிக முக்கியத்துவம் அளிப்பதை காட்டுகிறது.
தமிழன்பன் இலங்கை காத்தான்குடியிலிருந்து என்.எம்.எஃப். ருக்ஷனா அனுப்பிய கடிதம். சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் நிகழ்ச்சிகள் அருமையாக உள்ளன. நிகழ்ச்சிகளை கேட்க கேட்க தொடர்ந்து கேட்ப்பதற்கான ஆவலை அவை தூண்டுகின்றன. தமிழ்ப் பிரிவிலிருந்து தாவோர் இன மக்கள் செய்கின்ற தாள் கத்தரிப்புகளை அனுப்பியிருந்தீர்கள். அவை மிகவும் நல்ல கலைநுட்பங்களோடு வெட்டப்பட்டு இருந்தன. சீனர்களின் சிறந்த கலைநயத்தை வெளிப்படுத்துவதற்கு அடையாளமாக இந்த தாள் கத்தரிப்புகள் உள்ளன.


கலை விழுப்புரம் எஸ். சேகர் அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியை பற்றி எழுதியுள்ள கடிதம். பறவை காய்ச்சல் நோய் மற்றும் அந்நோய் வராமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் மிகவும் பயனுள்ள தொகுப்பாக இருந்தது. புகை உலகிற்கு பகை என்ற அறிவியல் உலகம் நிகழ்ச்சி மூலம் புகைபிடித்தல் உலக மக்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை அறிந்தேன். புகை தனிநபருக்கு மட்டுமல்ல உலகிற்கே பகை என்பது உண்மை தான்.
தமிழன்பன் அடுத்து, கோவை மாவட்ட சீன வானொலி நேயர் மன்றத் தலைவர் தெ.நா.மணிகண்டன் மார்ச் திங்கள் முதல் நாள் நடைபெற்ற மாவட்ட நேயர் மன்ற கலந்தாய்வு கூட்டம் பற்றி எழுதிய கடிதம். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் செய்தித் தொகுப்பு நிகழ்ச்சியை ஒவ்வொரு நாளும் வேவ்வேறு அறிவிப்பாளர்கள் தயாரித்து வழங்குவதற்கும், இன்றைய திபெத் நிகழ்ச்சியின் மூலம் திபெத்தின் 50 ஆண்டு கால வளர்ச்சி பற்றி தெரிவிப்பதற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உலகப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து அனைத்து நாடுகளும் விடுபட சீனா முன்னுதாரணமாக அமைய வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
கலை நீலகிரி கீழ்குந்தா கே.கே.போஜன் சீன பண்பாடு பற்றி எழுதிய கடிதம். உலகமயமாக்கத்தால் நமது நாட்டிற்கேற்ற பண்பாட்டையும், நடைமுறை பழக்கவழக்கங்களையும், பொருட்களையும் மறந்தது தான் நுங்கு, எலந்த பழம், கோலி சோடா, நன்னாரி சர்பத், காளிமார்க் சோடா மற்றும் கலர், மிகவும் புகழ்பெற்ற நீலகிரி ஸ்பென்சர் சோடா போன்றவை காணாமல் போனதற்கு காரணம் என்பது இந்நிகழ்ச்சியில் நன்கு விளக்கப்பட்டது. சீனாவின் அடையாளங்களை பாதுக்காக்கும் முயற்சிகள் பண்பாடு, மருத்துவம், கட்டிடக்கலை, அறிவு சார் சொத்துரிமை என்ற துறைகளில் பரந்து விரிந்து காணப்படுவது போற்றுதற்குரியது.

1 2