• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-28 09:13:10    
நேயர்களின் கருத்துக்கள்

cri

தமிழன்பன் இலங்கை மட்டக்களப்பு து. பிரவீன் தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். சீன தேசத்தில் தமிழுக்கு வணக்கம் கொடுத்து வளர்த்து வரும் உங்களுக்கு நன்றி என்ற வார்த்தையோடு மட்டும் எங்கள் நன்றியுணர்வை காட்டிவிட முடியாது. நான் தமிழனாக இருப்பதால் பாரதி சொன்ன "உலகிலுள்ள கலைகளையும், சொற்களையும் தமிழோடு சேர்" என்ற கூற்றுக்கமைய தமிழ் மூலம் சீனம் கற்க ஆசைப்பட்டேன். என் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைப்பது தான் வெள்ளி இரவில் சீன வானொலி ஒலிபரப்புகின்ற தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி. இப்போது எனக்கு ஓரளவு சீன மொழி தெரியும் என்பதில் பெருடையடைகின்றேன். மேலும் சீன வானொலி எனக்கு அனுப்பிய சீனத் தமிழொலி இதழ் மூலமாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 17 வது தேசிய மாநாட்டை பற்றி விரிவாக அறிந்து கொண்டேன்.
மின்னஞ்சல் பகுதி
விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன்
இந்திய சீன உறவுப் பாலம் என்ற செய்தித்தொகுப்பு கேட்டேன். இந்தியாவின் தென் பகுதியிலுள்ள தமிழகத்தின் வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் சீன மொழி மையம் நிறுவப்பட்டுள்ளதை அறிந்தேன். சீன மொழி இப்பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்பட இருப்பதையும், அங்கு கன்பூசியஸ் சிலை அமைக்கப்பட இருப்பதையும் அறிந்தேன். முற்காலத்தில் தமிழக அரசர்களுடன் சீன வணிகர்களும், அரசர்களும் அதிக தொடர்பு வைத்திருந்தனர். அன்றைய உறவுப்பாலம் தான் இன்று தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வந்து, இன்று தமிழகத்திற்கு சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு, தமிழகத்தில் சீன மொழிக்கல்வி, கன்பூசியஸ் சிலை என்று தொடர்கிறது.
வளவனூர் புதுப்பாளையம், எஸ். செல்வம்
அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வுப் பாதுகாப்பு நிகழ்ச்சியில் இடம்பெற்ற கல்லீரல் பாதுகாப்புத் திட்டம் என்ற கட்டுரையின் மூலம், மிகவும் அபாயகரமான கல்லீரல் சுருக்கம் மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஆகியவற்றுடன் தொடர்புடைய சிகிச்சைக்கும், ஆலோசனைக்கும் கல்லீரல் பாதுகாப்புத் திட்டம் எவ்வாறெல்லாம் உதவியாக இருக்கும் என்பதை அறிந்தேன். உலகின் வேறு எந்தப் பகுதியிலும் நிறுவப்படாத இப்புதுமையான திட்டம், மக்களின் நலனில் செலுத்தப்படும் கவனத்தையும், அக்கறையும் வெளிப்படுத்தி வியக்க வைத்தது. கல்லீரல் சிகிச்சை மிகவும் நுட்பமானது. அதனை மேம்படுத்தும் வகையில், அடுத்த 20 ஆண்டுகளில், கல்லீரல் நோயாளிகளின் மீது பெருமளவு கவனம் செலுத்தும் கல்லீரல் பாதுகாப்புத் திட்டம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.


சர்வதேச தமிழ்ப்பணி மன்றம் பொன்.ஏழிசை வல்லபி
கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியை செவிமடுத்தேன். தொடங்கவுள்ள அருமையான திபெத் என்னும் பொது அறிவுப் போட்டி பற்றி தி.கலையரசி மற்றும் செல்வம் ஆகியோர் தெளிவான முறையில் உரிய விளக்கங்களை தெரிவித்தனர். இணையத்தின் மூலம் நடத்தப்படும் பொது அறிவுப் போட்டியின் மூலம், எதிர்கால திசை இணையத்தை நோக்கி நகர்வதை புரிந்து கொண்டேன். பொது அறிவுப் போட்டிகளில் விடைத்தாட்களை அதிக அளவில் அனுப்பி தமிழ்ப்பிரிவு முதலிடத்தை பெற பாடுபட்டு வரும் நேயர்கள், இம்முறையும் ஆர்வமுடன் செயல்பட்டு, இந்த இணையத்தள சுற்றுலாப் பொது அறிவுப் போட்டியிலும் தமிழ்ப்பிரிவை முதலிடத்திற்கு கொண்டு செல்வார்கள் என நம்புகின்றேன்.
பாண்டிச்சேரி, ஜி.ராஜகோபால்
சீனா, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பேரழிவுகளை குறைக்கும் பணியில் அதுவும் இயற்கைச் சீற்றங்களை சமாளிக்கும் நடவடிக்கைகளில் மாபெரும் முன்னேற்றங்களைப் பெற்றிருப்பது பற்றிய செய்தியினை சீன வானொலியின் மூலமாக கேட்டேன். ஒரு நாடு இயற்கைச் சீற்றங்களால் எப்படியெல்லாம் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதை சிச்சுவான் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது சீனா நன்கு உணர்ந்துள்ளது. அதை சமாளிக்கும் முன்னேறிய முறைகளை சீனா பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. இவ்வாறு இயற்கை சீற்றப் பாதிப்புகளுக்கு உள்ளாகும் நாடுகளுக்கு இத்தகைய அவசர காலங்களில் பேரழிவு குறைப்புப் பணியை சிறப்பாக மேற்கொள்ள சீனா போன்ற நாடுகள் உதவிசெய்து பயிற்சிகளை அளிக்க வேண்டும்.
விஜயமங்கலம், குணசீலன்
திருமதி சைனா பாலு அவர்களின் துணைவியாரின் உரையாடலை நட்புப்பாலம் நிகழ்ச்சியில் கேட்டேன். முன்பு சீனாவிலிருந்து சாதரண ஒரு கடிதம் வந்தாலே அஞ்சல் துறையும் காவல்துறையும் கடிமையாக விசாரணை மேற்கொள்வார்கள். அதையும் மீறி சீனாவுக்கு தொடர்ந்து கடிதம் எழுதியதோடு, சீனாவுக்கும் சென்று வெற்றிகரமாக தாய்நாடு திரும்பிய சைனா பாலு அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. சொந்த பணச் செலவில் சீன வானொலிக்கு கடிதம் எழுதி வந்த சைனா பாலுவுக்கு திருமதி பாலு அம்மையாரும் ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். இது போன்ற நேயர்கள் தான் சீனா வானொலிக்கு கிடைத்த பெரிய வெற்றியாகும்.


ஊத்தங்கரை, கவி. செங்குட்டுவன்
எப்ரல் 17 ஆம் நாள் ட்டிரினிடாட் டொபாகோ ஸ்பெயின் துறைமுகத்தில் துவங்கிய 5வது அமெரிக்க கண்ட நாடுகள் உச்சி மாநாடு பற்றியும் அதில் 34 அமெரிக்க நாடுகளின் அதிபர்கள் அல்லது பிரதிநிதிகள் கலந்துகொண்டதையும் அறிந்தேன். மனிதகுல வளர்ச்சியை தூண்டுவது, எரியாற்றல் பாதுகாப்பு, சுற்றுச்சூழலின் தொடரவல்ல வளர்ச்சி, மக்களின் எதிர்காலத்தற்கு உத்தரவாதம் அளிப்பது ஆகியவற்றில் சமூகம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளிலான பல கொள்கைகளை இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் உருவாக்கி, அமெரிக்க கண்ட நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் நலத்தை மேம்படுத்த முடிவெடுத்துள்ளதை அறிந்தேன். இதேநிலையை உலக நாடுகள் அனைத்திற்கும் பரவலாக்கும் முயற்சியையும், உத்திரவாதத்தையும் மேற்கொண்டால் வளரும் நாடுகள் அனைத்தும் பயன்பெறும்.
மதுரை, அண்ணாநகர், N. இராமசாமி
சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சியில் சீனாவின் ஊகான் நகரில் அமைந்துள்ள மிக அழகான ஊகான் பல்கலைக்கழகத்தில் பூத்துக் குழுங்கும் செர்ரிமலர்களை பற்றி கேட்டு ரசித்தேன். சீனாவில் வசந்தக் காலத்தில் பூத்து குலுக்கும் செர்ரி மலர்களின் கண்கொள்ள காட்சி, ஊஹான் வரலாற்றை பிரிதிப்பலிப்பதை அறிந்துக் கொண்டேன். சீன அரசு இந்த தோட்டத்தை நவீன பயன்படுத்தி அழகுற செய்யும் நடவடிக்கை ஆயிரக்கணக்கான செர்ரி மலர்கள் பூத்துக்குலுக்கும் காட்சியை நாள் முழுவதும் இரசித்து கொண்டிருக்க செய்யும் முயற்சியாக பார்க்கலாம்.


1 2