அண்மையில், புதிய மருத்துவ அமைப்புமுறை சீர்திருத்தத்தை, சீன அரசு மேற்கொண்டது. அடுத்த 3 ஆண்டுகளில், அடிப்படை மருத்துவ உத்தரவாத அமைப்புமுறையில், நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களின் மக்களை சேர்த்து, மருத்துவச் செலவைக் குறைக்க வேண்டும். ஆகையால், 85 ஆயிரம் கோடி யுவானை ஒதுக்கி, மருத்துவ மற்றும் சுகாதாரத்துக்கான அடிப்படை வசதி கட்டுமானத்தை அதிகரித்து, மக்கள் சிகிச்சை பெறும் நிலை மற்றும் சூழலை மேம்படுத்த சீன அரசு முயற்சி செய்து வருகிறது.
புதிய மருத்துவ அமைப்புமுறை சீர்திருத்தத்தின்படி, மருத்துவ மற்றும் சுகாதார துறைக்கான ஒதுக்கீட்டை, சீன அரசு பெரிதும் அதிகரிக்கும். இதன் மூலம், பொது மக்கள் நலன்களைப் பெறலாம். அண்மையில், 85 ஆயிரம் கோடி மதிப்புள்ள மருத்துவ சீர்திருத்த நிதியின் பகிர்வை, சீன துணை நிதி அமைச்சர் wangjun அறிமுகப்படுத்தினார். இது குறித்து, அவர் சீன அரசவையின் செய்தியாளர் கூட்டத்தில் கூறியதாவது:
இந்த நிதியில் பெரும் பகுதி, அடி மட்ட நிலையில் பயன்படுத்தப்படுவதற்கு உத்தரவாதம் செய்ய வேண்டும். குறிப்பாக, சீனாவின் மத்திய மற்றும் மேற்கு பிரதேசங்கள் இதில் அடங்குகின்றன. அதேவேளையில், கிழக்கு பிரதேசத்துக்கும் நிதியுதவி பகிர்ந்தளிக்கப்படும் என்று அவர் கூறினார்.
1 2 3 4 5
|