• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-06 11:13:17    
புத்தாக்கம் நிறைந்த வாழ்க்கை

cri

Feng Guo பெட்டி என்ற சிறப்பு கடையைச் சேர்ந்த வடிவமைப்பாளர்களில் பெரும்பாலானோர் 1980ஆம் ஆண்டுகளில் பிறந்த இளைஞர்களாவர். அவர்களில் பலர் வடிவமைப்பு அல்லது நுண்கலைத் துறையில் கல்வி பயல்கின்றனர். இவர்கள் ஓய்வு அல்லது முழு நேர புத்தாக்கப் பணியில் ஈடுபடுகின்றனர். இக்கடையின் பெரும்பாலான நுகர்வோரும் 1980ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்கள் தான். அவர்கள் வடிவமைப்பாளரை ஒத்த விருப்பத்தையும் அனுபவங்களையும் கொண்டிருக்கின்றனர்.

2007ஆம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் தொடங்கிய பின், Feng Guo பெட்டி என்ற சிறப்பு கடை, பெய்ஜிங்கில் மிகப் பரபரப்பான வணிகப் பிரதேசத்தில் 4 கிளைகளை நிறுவியுள்ளது. மேலதிக இளைஞர்கள் ஊக்குவிக்கப்பட்டு, தங்களது மதி நுட்பத்தையும் திறமையையும் பயன்படுத்தி, இணையதள வசதியின் மூலம் புத்தாக்கப் பொருட்கள் கடையை நிறுவி, தாங்கள் வடிவமைக்கும் பொருட்களை விற்பனை செய்கின்றனர். தற்போது சீன இளைஞர்கள் சுதந்திரமாக தொழில் நடத்துவதை அடையாளப்படுத்தும் குட்டி எடுத்துக்காட்டு இதுவாகும்.


1 2 3