• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-05 11:45:01    
சீன வணிகர்களும், வர்த்தகச் சின்னங்களும்

cri

அண்மையில் தமிழகத்துக்கு ஒரு குறுகிய பயணமாக சென்று திரும்பினேன். சீன வானொலியை தங்களது நெஞ்சுக்கு நெருக்கமாக்கி, வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாற்றிக்கொண்ட பல நேயர்களை, நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு அவ்வமயம் கிட்டியது. தமிழ்ப்பிரிவின் சீனத்து தமிழ்க்குடும்ப உறவுகளின் பணிக்கு தோள் தந்து, தமிழ்ப்பிரிவின் வளர்ச்சியில் பங்காற்றி, வலுவான அடித்தளம் அமைத்துதவி, தமிழ்ப்பிரிவின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் செதுக்கப்பட்டுள்ள முன்னாள் நிபுணர்கள் மூவரை சந்திக்கும் வாய்ப்பும், நேயர் மன்றக் கருத்தரங்கினூடாக கிடைத்தது. அதற்கும் சீனப் பண்பாடு நிகழ்ச்சிக்கும் என்னய்யா தொடர்பு என்ற கேள்வி உங்களில் பலருக்கு எழும். இதோ பதில்.

இப்படி நல்ல அனுபவங்களை ஏற்படுத்திய இந்த குறுகிய பயணத்தின்போது, கொள்கை பிடிப்பும், லட்சியத்துடிப்பும் கொண்ட சில நண்பர்களோடு அளவளாவி மகிழ்ந்தேன். செவிக்குணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படுவது வழமைதானே. ஆக இந்த முறை நம்மூரில் அசைவ உணவு விரும்பிகள் நாடிச்செல்லும் உணவகங்களில் ஒன்றான அஞ்சப்பரில் ஓரிரு முறை உணவருந்தி மகிழ்ந்தேன். சில ஆண்டுகளுக்கு முன் மதிய வேளை உணவுக்காய் அஞ்சப்பரும், வேலு மிலிட்டரியும், சரவண பவனும், சங்கீதா உணவகமுமாய் பதம் பார்த்த நாவுக்கு, அஞ்சப்பரின் சுவையான உணவு சுகமாகத்தான் இருந்தது. அஞ்சப்பரின் சுவையை வேறு உணவகத்தில் பெறமுடியாதா? ஏன் வீட்டிலேயே அந்த சுவையை அம்மாவோ, மனைவியோ அல்லது மற்ற உறவுகளோ செய்து காட்டமாட்டார்களா என்ன? நிச்சயம் முடியும். சரி, கொஞ்சம் அதை ஒதுக்கிவிட்டு, அடுத்த அனுபவத்தையும் கேளுங்கள். இன்றைக்கு குளிர்பானம் என்றால், கொக்க கோலா, பெப்ஸி என இருவேறு நிறுவனங்களில் பல வகை பானங்கள்தான் நமக்கு தெரியும். ஒரு காலத்தில், தம்ஸ் அப், டோரினோ, பொவோண்டோ, கோல்ட் ஸ்பாட் என்று நமது உள்ளூர், உள்நாட்டு பானங்கள் இருந்ததை இன்றைக்குள்ள இளவட்டங்கள் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த முறை தமிழகப் பயணத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு பொவோண்டோவின் சுவையை என் நாவுக்கு மீண்டும் காட்டினார்கள் நண்பர்கள்.

1 2 3