• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-08 09:30:44    
அன்பளிப்பபோடு பள்ளிக்குத் திரும்பிய கிராமப்புற ஆசிரியை Wang Yuee

cri
இவ்வாண்டு இரண்டு கூட்டத் தொடர் காலத்தில், பெய்ஜிங் Xin Da Du ஹோட்டலின் ஒரு அறையில், சிவப்பு நிற ஆடை அணிந்த கிராமப்புற ஆசிரியை Wang Yuee, Fu Zhou நகரிலுள்ள ஒரு நிறுவனத்தின் பிரதிநிதியுடன் உடன்படிக்கை ஒன்றில் கையொப்பமிட்டார். Wang Yuee தனது கனவை நிறைவேற்றுவதற்கு உதவியளிப்பதாக இந்நிறுவனம் வாக்குறுதி அளித்தது. இது, பெய்ஜிங்கிலிருந்து குழந்தைகளுக்கு Wang Yuee கொண்டு செல்லும் அருமையான அன்பளிப்பாகும்.

இவ்வாண்டின் இரண்டு கூட்டத் தொடர் துவங்கும் முன், ஒரு தொலைக்காட்சி நிலையத்துக்கு Wang Yuee பேட்டி அளித்தார். அப்போது தனது சில விருப்பங்களை அவர் தெரிவித்தார். ஒவ்வொரு குழந்தைக்கும் சொந்த படுக்கை வசதி, ஆசிரியர்களுக்கு ஓரளவு நல்ல மேசை, விளையாட்டுப் பாடத்தின் போது கழுகு கோழிக்குஞ்சுகளைப் பற்றிக் கொள்ளும் விளையாட்டில் மட்டுமே ஈடுபட வேண்டிய நிலை தவிர்க்க போதிய விளையாட்டு வசதிகள் முதலியவை அவரது விருப்பங்களாகும்.
எதிர்பாராதவாறு, இவ்வாண்டின் இரண்டு கூட்டத் தொடர் காலத்தில், Fu Zhou நகரிலுள்ள ஒரு நிறுவனத்தின் பொறுப்பாளர் அந்தத் தொலைக்காட்சி நிலையம் ஒளிப்பரப்பிய Wang Yueeயின் பேட்டி நிகழ்ச்சியைக் கண்டு, Wang Yuee அம்மையாரின் செயலினால் மனமுருகினார். பெய்ஜிங்கிற்குச் சென்று Wang Yueeவைத் தேட இப்பொறுப்பாளர் உடனடியாக பிரதிநிதி ஒருவரை அனுப்பினார். மகிழ்ச்சி தந்த தொலைபேசித் தொடர்பு பற்றிக் குறிப்பிடுகையில் Wang Yuee உணர்ச்சி வசப்பட்டுக் கூறியதாவது—
"அப்போது நான் வாய்பேச முடியாமல் வியப்புடன் நின்றேன். நான் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன். நான் உணர்ச்சி வசப்பட்டேன். எங்கள் பள்ளிக்கு உதவித் தொகையை வழங்க விரும்புவதாக அவர் கூறினார். எனது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இதைக் கேட்ட நான் மகிழ்ச்சி அடையாமல் இருக்க முடியுமா? சில நாட்களிலே பிரச்சினைகளைத் தீர்ப்பதில் எங்களுக்கு உதவியளிக்கும் நிறுவனம் ஒன்று தோன்றியது. நான் உணர்ச்சி வசப்படாமல் இருக்க முடியுமா?" என்று Wang Yuee கூறினார்.

Yang Xin மாவட்டம், சீனாவின் ஹுபெய் மாநிலத்திலுள்ள தேசிய நிலை வறுமை மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் ஒரு துவக்கப் பள்ளியின் தலைவராக Wang Yuee இருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு மேலான பணிக் காலத்தில், Wang Yueeவின் பள்ளி மலை உச்சியிலிருந்த கோயிலிலிருந்து நீரிலுள்ள ஒரு தீவுக்கு இடம் பெயர்ந்தது. பின்னர் இத்தீவிலிருந்து மலை சூழ்ந்த நீர் தேக்கப் பகுதிக்கு இடம் பெயர்ந்தது. இந்தப் போக்கில் பள்ளியின் வசதிகளையும் சூழ்நிலையையும் மேம்படுத்த அவர் எப்போதும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
"சமையலறை, உணவு விடுதி ஆகியவை இல்லாத நிலையில் எங்கள் பள்ளி இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் அரசு மற்றும் தொழில் முனைவோரின் உதவியுடன், கல்விக் கட்டிடங்கள், சமையலறை, உணவு விடுதி, கழிப்பறை ஆகியவை கட்டப்பட்டன." என்று Wang Yuee கூறினார்.
1 2