• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-08 09:30:44    
அன்பளிப்பபோடு பள்ளிக்குத் திரும்பிய கிராமப்புற ஆசிரியை Wang Yuee

cri

அரசு மற்றும் சமூகத்தின் உதவியோடு, Wang Yueeவின் பள்ளி, உள்ளூரில் மிகவும் தரமிக்க வசதி கொண்ட பள்ளியாக மாறியுள்ளது. ஆனால் பள்ளியின் விளையாட்டுத் திடல், அரை கூடை பந்து திடலாகும். ஒரேயொரு விளையாட்டு வசதி, பாழடைந்த கூடைப் பந்து விளையாட்டுத் தூண் தான். விடுதியாக கூறப்படுவது உண்மையில் காலியான பெரிய வகுப்பறை ஆகும். குழந்தைகளின் படுக்கை, இருக்கை மற்றும் மரப் பலகைகளால் தயாரிக்கப்பட்டது. இரவில் 20க்கு அதிகமான குழந்தைகள் இந்தப் படுக்கையில் உறங்குகின்றனர். முழுப் பள்ளியிலும் நவீனமயமாக்க சாதனங்கள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நிறுவனம் நன்கொடையாக வழங்கிய கணினியும் எளிமையான ஒரு படங்கள் காட்டும் கருவியும் தான்.
Fu Zhou நகரிலுள்ள அந்த நிறுவனம் உதவிக்கரம் நீட்டிய போது, Wang Yuee நீண்ட நேரம் உணர்ச்சி வசப்பட்டார். ஆனால் பேட்டியளிக்கும் போது இந்நிறுவனத்தின் பிரதிநிதி திரு Cheng தனது நிறுவனம் பற்றியும் உதவித் தொகையின் விபரம் பற்றியும் அதிகமாக குறிப்பிட விரும்பவில்லை. Wang Yuee அம்மையாரின் சில பெரிய விருப்பங்களை உடனடியாக நிறைவு செய்து, குழந்தைகளுக்கு படுக்கைகள்,

கணினிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்குவதோடு, இனிமேல் தன்னால் இயன்ற அளவில் உதவியளிப்பார் என்றும், இந்தப் பள்ளி மேலும் சீராக வளர வேண்டும் என்றும் அவர் செய்தியாளரிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது—
"ஆசிரியை Wang Yuee போன்ற பள்ளித் தலைவர்கள் மீதும் துவக்கப் பள்ளியிலுள்ள இத்தகைய குழந்தைகள் மீதும் அக்கறை செலுத்துமாறு, வறுமைப் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தி வரும் தொலை நோக்குடையவர்கள் அல்லது தொழில் முனைவோர்களை அணி திரட்டுவது என்பது, நாங்கள் இவ்வாறு செயல்படுவதற்கு காரணமாகும்" என்று அவர் கூறினார்.
சீனத் தேசிய மக்கள் பேரவைப் பிரதிநிதியாக விளங்கிய பின், Wang Yuee, Yang Xin மாவட்டத்திலிருந்து வெளியேறி, பல பள்ளிகளில் கள ஆய்வு செய்தார். தனது துவக்கப் பள்ளிக்கும் நகரங்களிலுள்ள பள்ளிகளுக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி நிலவுகிறது என அவர் கண்டறிந்தார். கல்விக்கான ஒதுக்கீட்டை அரசு அதிகரித்துள்ளது என்ற போதிலும், கிராமப்புற கல்விக்கான ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க வேண்டும் என விரும்புவதாக அவர் கூறினார்.
"நமது சீனா பெரிய நாடாகும். கிராமப்புற மக்கள் தொகை அதிகம். கடந்த சில ஆண்டுகளில் வறுமைப் பிரதேசக் கல்விக்கு அரசு பெரும் தொகை நிதியுதவியை வழங்கிய போதிலும், இந்த ஒதுகீட்டுத் தொகை ஒரு வரம்புக்கு உட்பட்டதாகவே இருக்கிறது" என்று Wang Yuee கூறினார்.
1 2