அடுத்த நாள், பேரரசின் பிரதிநிதி தன்னிடமிருந்த அரச முத்திரை காணாமல் போய்விட்டதை கண்டார். உடனே அதை தேடுமாறு வேலையாட்களை பணித்தார். ஆனால் முத்திரை கிடைக்கவில்லை. எனவே நிச்சயம் இந்த வட்டத்தின் தலைவன் தான் முத்திரையை திருடியிருக்கவேண்டும் என்று உணர்ந்தார். தான் அவனுக்கு நண்பன் அல்ல, மேலும் அவனது வட்டத்தில் இருப்பதால் சில உளவாளிகளை அவன் அனுப்பியிருக்கக்கூடும், முத்திரையை திருடியிருக்கக் கூடும் என்று புரிந்துகொண்ட பேரரசின் பிரதிநிதி, சரி அவனுக்கு அவன் வழியிலேயே பாடம் கற்றுக்கொடுக்கலாம் என்று முடிவெடுத்தார். பின்னர் முத்திரை இருந்த பெட்டியை மறுபடி மூடிய அவர், தனது வேலையாட்களின் முத்திரை திருடுப்போனதை பற்றி வெளியே மூச்சு விடவேண்டாம் என்று அறிவுறுத்தினார். அதற்கு பின் தனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி வெளியே எங்கும் செல்லாமல் தவிர்த்தார். இதையெல்லாம் அமைதியாக இருந்தபடி ஏன் என்ற காரணம் அறிந்ததால் வட்டத்தலைவன் கொக்கரித்து சிரித்தான். அந்நாளில் ஒரு குறிப்பிட்ட மாவட்டம் அல்லது குறுநிலத்துக்கு பேரரசின் பிரதிநிதிகள் யாராவது வந்தால், அவ்விடத்திலுள்ள அதிகாரிகள் அவரை சென்று பார்க்கவேண்டியது ஒரு நடைமுறையாகும். அந்த வகையில் இந்த வட்டத் தலைவனும் பேரரசின் பிரதிநிதியை சென்று சந்திக்க நேர்ந்தது. அரச முத்திரை தன் கையில், எனவே பேரரசின் பிரதிநிதி தன்னை ஒன்றும் செய்ய இயலாது என்ற மமதையோடு சென்றான் வட்டத்தலைவன். பேரரசின் பிரதிநிதி வட்டத்தலைவனை அழைத்து தேனீர் அளித்து, பேசி மகிழ்ந்தார். அப்போது திடீரென அங்கு வந்த வேலையாள் ஒருவன் தீ, தீ, அய்யா சமையலறையில் தீப்பிடித்து விட்டது என்று கத்தினான். இதைக் கேட்ட அரச பிரதிநிதியின் முகம் மாறியது, உடனே அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து பாய்ந்து குதித்து மேசையில் இருந்த அரச முத்திரை பெட்டியை கையில் எடுத்தார். வட்டத்தலைவனிடம் அந்த முத்திரை பெட்டியை கொடுத்து, நாம் உடனே இங்கிருந்து செல்லவேண்டும். நீ இந்த முத்திரை பெட்டியை பாதுகாப்பாக வைத்துக்கொள், வெளியே சென்று தீயை அணைக்க உதவிக்கு ஆள் கொண்டு வா என்று அனுப்பினார். எதிர்பாராத இந்த வித்தைக்கு தயாராகாத வட்டத்தலைவன் வேறு வழியின்றி, அரச பிரதிநிதி கொடுத்த முத்திரை பெட்டியை வாங்க மறுக்கவும் முடியாமல் விழி பிதுங்கிப் போனான். வேடிக்கை என்னெவென்றால், தீயை அணைத்து முடித்த பின் பார்த்தால் சமையலறையில் மட்டுமே தீபிடித்திருந்தது. இந்த அரசு முத்திரை பெட்டியிருந்த அறையை தீ எட்டவேயில்லை. ஆக, தான் ஏமாற்றிய அரச பிரதிநிதி இப்போது தன்னையே ஏமாற்றி வித்தை காட்டியதை உணர்ந்த வட்டத்தலைவன், முத்திரை இல்லாத பெட்டியை அப்படியே கொடுத்தால், என்னமோ தானே அதை எடுத்ததாக அரச பிரநிதி கூற வாய்ப்புண்டு அது தானே தனக்கு குழி தோண்டுவது போலாகிவிடும் என்றுணர்ந்தான். வேறு வழியின்றி, கில்லாடி திருடனை வைத்து திருடிக்கொண்டு வந்த அரச முத்திரையை காலியாக இருந்த முத்திரை பெட்டியில் வைத்து, மதிநுட்ப அரச பிரதிநிதியிடம் ஒப்படைத்தான். அதன் பிறகு தன் வேலை முடித்து தலைநகருக்கு திரும்பினார் அரச பிரதிநிதி, சில வாரகாலத்தில் வட்டத்தலைவன், முறைகேடுகளுக்காக பதிவியிலிருந்து நீக்கப்பட்டான். தன்னுடைய எண்ணத்தையோ, கோபத்தையோ வெளியே சொல்லக்க்கூட இல்லை ஆனால், தான் எண்ணியது போலவே, தன்னிடம் திருடியதை தன் மதியை பயன்படுத்தின் திரும்பப் பெற்றார் அந்த அரசப் பிரதிநிதி. சிலர் பேசியே சாதிப்பார்கள், சிலர் பேசாமலும் சாதிப்பார்கள். 1 2
|