Ericsson தொழில் நிறுவனம் போல, வேறு பல தொழில் நிறுவனங்களும், chen duஇன் சிறப்பான முதலீட்டுச் சுற்றுச்சூழலை தேர்ந்தெடுந்துள்ளன. அவை, chen du நகரில் முதலீடு செய்து, தொழிற்சாலைகளை உருவாக்கியுள்ளன. Chen du yu bi கணினி மென்பொருள் கூட்டு நிறுவனத்தின் தலைவர் cao jian wei கூறியதாவது
சிறப்பான அடிப்படை வசதி, chen duஐ நாங்கள் தேர்ந்தெடுக்க முக்கிய காரணங்களில் ஒன்றாகும். கடந்த ஆண்டு மே திங்கள் நிகழ்ந்த நிலநடுக்கத்தின் போதும், அதற்கு பிறகும் தொடர்ந்து பணி செய்து இருந்தோம். அலுவலகத்தின் மின்சார வினியோகமும் இணையமும் இயல்பாக இருந்தன. Chen duஇல் முதலீடு செய்வது, சரியான தெரிவாகும். ஏனென்றால், இங்கு, சிறப்பான அடிப்படை வசதிகள் உள்ளன. அத்துடன், இது, பாதுகாப்பான இடமாகும்.
சிச்சுவானிலுள்ள பல்வேறு அரசுகளின் முயற்சியால், கடும் நிலநடுக்கத்துக்குப் பிறகு, அன்னியத் தொழில் நிறுவனங்கள், சிச்சுவானில் தொடர்ந்து செயல்பட்டு இடைவிடாமல் முதலீடு செய்து வருகின்றன.
உள்ளூரின் பல்வேறு நிலை அரசுகள், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அன்னிய தொழில் நிறுவனங்களுக்கு, நிலநடுக்கத்தின் பாதிப்பை தணிவித்தன. அன்னிய வணிகர்களின் முதலீட்டு நம்பிக்கையை வலுப்படுத்துவது, நிலநடுக்கத்துக்கு பிறகான மறுசீரமைப்பில் அவற்றின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.
கடுமையான நிலநடுக்கத்துக்குப் பிறகு, அன்னிய தொழில் நிறுவனங்களுக்கான நிலநடுக்கத் தடுப்பு மற்றும் நிவாரணப் பணியையும், உற்பத்தியை மீட்கும் பணியையும் சிச்சுவான் மாநிலத்தின் வணிகத் துறை, உடனடியாக துவங்கியது. சிச்சுவான் மாநிலத்தின் வணிகத் துறையின் அதிகாரி shi zheng hua கூறியதாவது
2009ம் ஆண்டின் முதல் காலாண்டில், சிச்சுவான் மாநிலத்தில் முதலீட்டுத் தொகை ஒரு கோடி அமெரிக்க டாலரை தாண்டிய அன்னிய மூதலீட்டுத் திட்டப்பணிகளின் எண்ணிக்கை 15 ஆகும். 7 அன்னியத் தொழில் நிறுவனங்களும், அதன் முதலீ்ட்டுத் தொகையை அதிகரித்துள்ளன.
இவ்வாண்டின் மார்ச் திங்கள் இறுதியில், சிச்சுவானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 6 பிரதேசங்களில் அன்னியத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, 4 ஆயிரத்து 323ஐ எட்டியுள்ளன. இது நிலநடுக்கத்துக்கு முன், அதே இருந்ததை விட 174 அதிகரித்துள்ளது. சிச்சுவானில் அன்னியத் தொழில் நிறுவனங்களின் முதலீட்டுத் தொகை, 4 ஆயிரத்து 300 கோடி அமெரிக்க டாலரை தாண்டியுள்ளது.
1 2 3
|