• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-12 22:58:11    
சிச்சுவானில் நெடுஞ்சாலை மறுசீரமைப்பு

cri

வென்ச்சுவான் நிலநடுக்கமும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு போன்ற பேரழிவுகளும், சிச்சுவான் மாநிலத்தின் போக்குவரத்து வசதிகளைப் பெரிதும் சீர்குலைத்துள்ளன. 9 உயர்வேக நெடுஞ்சாலைகள், 16 முக்கிய சாலைகள் மற்றும் கிராமப்புறங்களிலான சாலைகள் கடுமையாக சீர்குலைக்கப்பட்டன. சாலைகள் துண்டிக்கப்பட்டதால் 400க்கு மேலான வட்டங்கள், குறிப்பிட்ட காலத்திற்கு வெளிப்புறத்துடனான தொடர்பு அனைத்தையும் இழந்தன. ஆனால், நிலநடுக்கத்திற்குப் பிந்தைய ஓராண்டிற்குள், yingxiuக்கு செல்லும் உயர்வேக நெடுஞ்சாலை சீராக்கப்பட்டு போக்குவரத்துக்கு திறக்கப்பட முடிந்துள்ளது. இது அனைவரின் எதிர்பார்ப்பையும் தாண்டியது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட நிலவியல் பேரழிவுகள், சிச்சவானில் நெடுஞ்சாலைகளின் மறுசீரமைப்புப் பணிக்கு முன் கண்டிராத இன்னலையும், சவாலையும் கொண்டு வந்தன. இவ்வாண்டின் மார்ச் திங்களில் துவக்கப்பட்ட yingxiuஇலிருந்து wolong இயற்கைப் பாதுகாப்பு பிரதேசத்திற்குச் செல்லும் நெடுஞ்சாலைத் திட்டப்பணி இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். 45 கிலோமீட்டர் நீளமான இச்சாலையில், 18 கிலோமீட்டர் பகுதி புதிதாக கட்டியமைக்கப்பட வேண்டும். எஞ்சிய பகுதி, சீராக்கப்பட வேண்டும். இத்திட்டப்பணி wolong பிரேதசத்தின் மறுசீரமைப்புக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், ஓராண்டுக்கு பின், இங்கு நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத அறிகுறிகள் இன்னும் நிலவுகின்றன. இத்திட்டப்பணி, பணியாளர்களுக்கு முன்கண்டிராத நிர்ப்பந்தத்தையும் அறைகூவலையும் ஏற்படுத்தியது என்று 20க்கு மேலான ஆண்டுகளாக நெடுஞ்சாலை திட்டப்பணி மேலாண்மைப் பணியில் ஈடுபட்டு வரும் Li zhongwen கூறினார்.

1 2 3 4