இத்திட்டப்பணி ஆபத்தானதாகவும் கடினமாகவும் உள்ளது. குறிப்பாக, மண் அரிப்பு, எங்களது கட்டுமானப் பணிக்கு ஆபத்தாக அமைகிறது. போக்குவரத்து பாதுகாப்பு மிகக் குறைவு. செய்தித்தொடர்புக்கான அலைவரிசையும் அடிக்கடி துண்டிக்கப்பட்டது. இவையெல்லாம் எங்கள் பணிக்கு சிக்கல்களை ஏற்படுத்துகின்றன என்று அவர் கூறினார்.
சிக்கல்களை எதிர்நோக்கும் போது, திட்டப்பணியின் உயர் தரத்தை உறுதிப்படுத்த, 3 கண்காணிப்பு முறைமைகள் உருவாக்கப்பட்டன. புதிய கட்டுமான கருத்துக்களையும் பணியாளர்கள் முன்வைத்தனர். சாலை அமைகின்ற நில அமைப்பின்படி, சாலைகளின் பேரழிவு தவிர்ப்பு ஆற்றலை உறுதிப்படுத்தினர். இத்திட்டப்பணியின் பொறுப்பாளர்களில் ஒருவரான yuanquan கூறியதாவது
வெளி ஆற்றலால், புதிய பேரழிவுகள் நிகழக் கூடும். தொழில்நுட்பத்தில் புதிய முறைகளைப் பயன்படுத்தினோம். சாலையில் கடுமையாக சீர்குலைக்கப்பட்ட பகுதிகளை தவிர்க்கிறோம். முதலில் திட்டத்திலுள்ள மற்ற பகுதிகளின் கட்டுமானத்தை மேற்கொள்கிறோம். இந்த கட்டுமானப் பணி முடிந்த பின், சீர்குலைக்கப்பட்ட பழைய பகுதிகளை செப்பனிட்டு சீராக்குகிறோம் என்று அவர் விளக்கிக் கூறினார்.
போக்குவரத்து வசதி, நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மறுசீரமைப்பு மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையாகும். இதுவரை, சிச்சுவான் மாநிலத்தின் போக்குவரத்து சீரமைப்புப் பணி சுமூகமாக நடைபெற்று வருகிறது. 4 உயர்வேக நெடுஞ்சாலைகள் போக்குவரத்துக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 84 முக்கிய சாலைகளின் சீரமைப்பு பணிகளில் 82 துவங்கியுள்ளன. கிராமப்புறங்களில் 5000க்கு மேலான கிலோமீட்டர் நீலமான சாலைகள் மீட்கப்பட்டுள்ளன.
1 2 3 4
|