• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-13 14:47:24    
வலைப்பூ கிராமத் தலைவர் அ

cri

மிகவும் சிறப்பான ஒரு கிராமம். அதில் முதியோர்கள் வாழ்கின்றனர். ஆனால், அந்த கிராமம் முழுவதும் இளையோரின் உணர்வுகள் தான் நிரம்பியுள்ளன. Zhou Shuang Fu என்பவர், இக்கிராமத்தின் தலைவர் ஆவார். இக்கிராமம் உண்மையாக இந்த உலகில் இல்லை. இதை உலக வரைப்படத்தில் குறிக்க முடியாது. இது இணையத் தளத்திலுள்ள கிராமம். Sohu இணையத் தளத்திலுள்ள முதியோர் வலைப்பூ கிராமம். இந்த இணையத் தளத்தில் Zhou Shuang Fuவின் பெயர் Shang Tian Lan Yue என்பதாகும்.

இந்த வலைப்பூ கிராமத்தில் 586 உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். இதன் உறுப்பினர்களின் வயது, 50 முதல் 82 வரையாகும்.

திரு Zhou Shuang Fuக்கு வயது 64. முதியோர் வலைப்பூ கிராமத்தை நிறுவியவர்களில் இவர் ஒருவர். பெய்ஜிங் மாநகரின் Yi Zhuang பொருளாதார வளர்ச்சி மண்டலத்தில் அவர் வாழ்கின்றார். இந்த வலைப்பூ கிராமத்தின் தலைவர் பெய்சிங்கில் இருந்தாலும், இக்கிராம உறுப்பினர்கள் நாட்டின் பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள்.

"2005ஆம் ஆண்டு வலைப்பூ கட்டுரை எழுதத் துவங்கினேன். பின்னர், இணைய தளத்தில் எமது வலைப்பூவை உருவாக்கினேன். இணையத்தில் வலைப்பூ கட்டுரை எழுதும் மக்கள் ஒருவருக்கொருவர் கருத்துக்களை பரிமாற்றி கொள்கின்றனர். ஆனால், முன்பு இதற்கான மேடை இல்லை" என்று Zhou Shuang Fu கூறினார்.

2007ஆம் ஆண்டின் ஜூலை திங்கள் முதல் நாள், Sohu இணையத் தளத்தில் இந்த முதியோர் வலைப்பூ கிராமத்தை நிறுவினோம் என்றும் Zhou Shuang Fu கூறினார்.

இந்த வலைப்பூ கிராமம் சிறப்பாக நிறுவப்பட்ட பின், இதில் சேர்கின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் இதற்கிடையில், பிரச்சினை ஏற்பட்டது.

முதியோர் கணிணியைப் பயன்படுத்தும் நிலை குறைவாக இருந்தது. இளைஞர்களை விட, அவர்கள் தட்டச்சுசெய்து, படங்களை வலைப்பூவில் ஏற்றுவதன் வேகம் மந்தமாக இருந்தது. முதியோர் சிலர் வீடுகளில் குழந்தைகளைப் பராமரிக்க வேண்டியிருக்கிறது. ஆனாலும், இணையத்தை பயன்படுத்தும் நுட்பத்தைக் கற்றுக்கொள்ள விரும்புகின்றனர். எனவே, அவர்களுக்கு கணிணி பயிற்சி அளித்தோம். எடுத்துக்காட்டாக, Flash மென்பொருள் வகுப்பில், 20க்கு அதிகமானோர் சேர்ந்தனர்.

1 2