• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-05-13 14:47:24    
வலைப்பூ கிராமத் தலைவர் அ

cri

கிராமத் தலைவர் Zhou Shuang Fu தொல்லையைப் பொருட்படுத்தாமல், வலைப்பூ பதிவில் ஏற்படும் எல்லா பிரச்சினைகளையும் வென்றெடுப்பதில் கிராம உறுப்பினர்களுக்கு தலைமை தாங்கியுள்ளார். கிராம உறுப்பினர்கள் இந்த பயிற்சியில் தேறிய பின், அவர்கள் இணைய வலைப்பூவில் ஏற்றிய படங்களும், கட்டுரைகளும் மென்மேலும் அதிகரித்து வருகின்றன. முதியோர் வலைப்பூ கிராமத்துக்கு தற்போது தனிச்சிறப்பு கிடைத்துள்ளது.

Zhou Shuang Fuவின் அறிமுகத்தின் படி, சராசரியாக நாளுக்கு பத்துக்கு அதிகமான புதிய வலைப்பூ கட்டுரைகள் இந்த வலைப்பூவில் ஏற்றப்படுகிறன. வலைப்பூ கட்டுரைகள் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. உடல் நலம் மற்றும் சுற்றுலா பற்றிய கட்டுரைகள் முதலாவது பகுதியாக உள்ளன. கிராம உறுப்பினர்களின் வாழ்க்கை அனுபவம் பற்றிய கட்டுரைகள் இரண்டாவது பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. கிராம உறுப்பினர்களின் பேரன் தலைமுறையினரின் வளர்ப்பு தொடர்பான படங்கள் மற்றும் கட்டுரைகள் மூன்றாவது பகுதியில் உள்ளன. அரசு நிகழ்ச்சிகள் நான்காவது பகுதியாக இருக்கிறன. எடுத்துக்காட்டாக, இரு கூட்டத்தொடர்கள் பற்றியவை இந்த நான்காவது பகுதியில் ஏற்றப்படுகிறன.

கட்டுரைகளை எழுதி, கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதைத் தவிர, உறுப்பினர்களுக்கு செழிப்பான பண்பாட்டு மற்றும் கலை நடவடிக்கைகளை இந்த கிராமம் ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு நாள் இரவும் எட்டு மணியளவில் கிராமத் தலைவர் Zhou Shuang Fuவும், உறுப்பினர்களும் இணைய அரட்டை அறையில் ஒன்று கூடி, பாடல்கள் பாடி இசை விருந்து நடத்துகின்றனர்.

இவர்கள் பாடும் பாடல்கள், பழைய பாடல்கள். இப்பாடல்கள் அவர்களது இளைய கால நினைவுகளுக்கு திரும்பச் செய்கிறன. பாடல் பாடும் போக்கில், கடந்த கால மகிழ்ச்சியை அனுபவிக்க முடிகிறது. தவிர, பலவற்றைக் கற்றுக்கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக ஒளிப்பட தொழில் நுட்பத்தை கூறலாம்.


1 2